அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
டாப்சி நடித்து முடித்துள்ள இந்தி படம் ராஷ்மி ராக்கெட். இது ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனையின் கதை. சாதாரண குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண் சர்வதேச தடகள வீராங்கனையாக எப்படி மாறுகிறாள் என்கிற கதை. இந்த படத்தை ஆகர்ஸ் குரானா இயக்கி உள்ளார். டாப்சியுடன் பிரியங்கா பனியுல், அபிஷேக் பானர்ஜி, ஸ்வேதா திரிபாதி, சுப்ரிய பட்டக் நடித்துள்ளனர்.
இந்த படம் கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு கொரோனாவால் தடைபட்டு, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும் ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடித்து விட்டனர். இந்த படம் வருகிற 15ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தை உரிய காலத்துக்குள் முடிக்க படப்பிடிப்புகள் வேகமாக நடந்தது. படக் காட்சிக்காக டாப்சி விளையாட்டு மைதானத்தில் வேகமாக ஓடும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது டாப்சிக்கு தசை பிசகு ஏற்பட்டது. என்றாலும் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சிறிய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வலியை தாங்கிக் கொண்டு நடித்து முடித்தார். இப்போது தசை பிசகு பிரச்னை பெரிதாகி இருக்கிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட டாப்சி வீட்டில் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து டாப்சி கூறும்போது: ஓட்டப்பந்தைய காட்சிகள் எடுக்கப்பட்டபோது தவறி விழுந்ததில் தசை பிசகு ஏற்பட்டது. என்றாலும் வலியை தாங்கி கொண்டு நடித்தேன். இதனால் வலி அதிகமானதோடு பிரச்சினையும் அதிகமானது, தசைகள் இறுகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். ஒரு வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க செல்வேன், என்கிறார்.