காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
துல்கர் சல்மான் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பால்கி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் அரவிந்த்சாமியும், குஞ்சாக்கோ போபனும் ஒன்றாக விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விஷயம் இதுதான்.. அரவிந்தசாமியும் குஞ்சாக்கோ போபனும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் உருவாகி வரும் ரெண்டகம் {மலையாளத்தில் 'ஒட்டு'} என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படபிடிப்பும் துல்கர் சல்மான் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலயே நடைபெற்று வருவதால் இப்படி திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்தனராம்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்பியை நடிகர் குஞ்சகோ போபன் தனது சோசியல் மிடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனியர் சாக்லேட் ஹீரோக்களான அரவிந்த்சாமியும் குஞ்சகோ போபனும் ஜூனியர் சாக்லேட் ஹிரோவான துல்கர் சல்மானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பி தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.