அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! | வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி | சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் |
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார் கவுரி கிஷன். அதை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் ஒரு சில படங்களில் நடித்துவிட்ட கவுரி கிஷன் தெலுங்கிலும் ரீமேக்கான 96 படத்தில் தனது கேரக்டரில் மீண்டும் தானே நடித்தார்.
இந்தநிலையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா தயாரிக்கும் ஸ்ரீதேவி சோபன்பாபு என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் கவுரி கிஷன். சந்தோஷ் சோபன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சுஷ்மிதாவும் முதன்முறையாக ஒரு நடிகையாக அறிமுகமாகிறார். சிரஞ்சீவியின் பிறந்த நாளான நேற்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.