தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
மலையாள திரையுலகில் இரண்டுவிதமான 'நண்பேன்டா' கூட்டணி ரொம்பவே பிரசித்தம். ஒரே படத்தில் அறிமுகமான துல்கர் சல்மான் மற்றும் சன்னி வெய்ன், அதேபோல நிவின்பாலி - இயக்குனர் வினீத் சீனிவாசன்- நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் ஆகியோர் கடந்த பத்து வருட காலமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத ஆத்மார்த்தமான நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் மலையாள திரையுலகில் ஹீரோவின் நண்பராக, குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக என படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் சன்னி வெய்ன். துல்கர் சல்மான் அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் தான் இவரும் அறிமுகமானார். அப்போது இருந்து இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக மாறி, ஐந்து படங்களுக்கு மேல் இணைந்தும் நடித்துள்ளனர்.
இன்று சன்னி வெய்னின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் சல்யூட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ள துல்கர் சல்மான், “நீ பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியையும் என்னுடைய வெற்றியாகவே உணர்கிறேன்.. எப்போதுமே உன் பாதையில் பார்வையி பதித்திருப்பேன்.. உன்னை உற்சாகப்படுத்துவேன்.. இன்னொரு தாய்க்கு பிறந்த எனது சகோதரன் நீ” என நெகிழ்வுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.