ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் |
கொரோனா கால தளர்வுகளின் ஒரு பகுதியாக தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. மம்முட்டி நடித்த ஒன், தி பிரிஸ்ட் படங்கள் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் பகத் பாசில் நடித்த சி யூ சூன், இருள் ,ஜோஜி ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதனால், இனி பகத் பாசில் தொடர்ந்து ஓடிடி தளங்களில் நேரடியாகப் படத்தை வெளியிட்டால் எதிர்காலத்தில் அவரது எந்தப் படத்தையும் கேரளத் திரையரங்குகளில் திரையிட மாட்டோம். அவரது படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கேரள தியேட்டர் உரிமையாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக பகத் பாசிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தியேட்டர் அதிபர்கள் சங்கம் மறுத்துள்ளது. பகத் பாசிலிடமோ அவர் நடித்திருக்கும் படங்களாலோ எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, எல்லாத் தரப்புடனும் நாங்கள் நல்ல நட்போடு இருக்கிறோம் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியான பகத் பாசிலின் 3 படங்களும் ஓடிடி தளத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட படங்கள். அவரது மற்ற படங்கள் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்ற பகத் பாசில் தரப்பில் கூறப்படுகிறது.