காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் கிட்டத்தட்ட அவரது வேலைகள் நிறைவடையும் கட்டத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் புதிய பட அறிவிப்பு உகாதி திருநாளான இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் இணைந்து வெற்றியை கொடுத்தவர்கள் தான்.. தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வரும் கொரட்டாலா சிவா அதை முடித்ததும் ஜூனியர் என்டிஆர் படத்தை துவங்குகிறார்.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும், படப்பிடிப்பு முடிந்தாலும் எப்போது ரிலீசாகும் என நிச்சயமாக சொல்ல முடியாத சூழ்நிலையில், 2022 ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முன்கூட்டியே ரிலீஸ் தேதியையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்




