'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கொரோனா தாக்கத்திற்கு பிறகு மிக நீண்ட நாட்கள் கழித்து மம்முட்டி நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் கடந்த மார்ச்-11ஆம் தேதி வெளியானது. ஹாரர் த்ரில்லரான இந்தப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் மம்முட்டி நடித்து, கடந்த வருடமே படப்பிடிப்பு முடிவடைந்த '1' என்கிற படத்தின் வேலைகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து வரும் மார்ச்-26ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
15 நாட்கள் இடைவெளியில் மம்முட்டியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகிறது என்கிற ஆச்சர்யத்தை விட, மிகச்சரியாக, கேரளாவில் வரும் ஏப்ரலில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் சமயத்தில் இந்தப்படம் ரிலீஸாவது தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. காரணம், முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கடக்கல் சந்திரன் என்கிற பெயரில், கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மம்முட்டி.. ஒரு நேர்மையான, மக்களுக்கான முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளதாம். அந்தவகையில் வரும் தேர்தலில் மக்கள் மத்தியில் இந்தப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் படக்குழுவினர்.