சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கில் கவனிக்கத்தக்க படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பரசுராம். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கீதா கோவிந்தம் என்கிற படம் வெளியாகி உள்ளது.. இந்தப்படம் தயாரானபோதே இது மிகப்பெரிய வெற்றிபெறும் என்கிறவிதமாக பேசப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போல இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனராம்.
இதனால் உற்சாகமான படக்குழுவினர், இந்தப்படத்தின் வெற்றியை விழாவாக கொண்டாட முடிவுசெய்துள்ளனராம். இந்த வெற்றிவிழாவில் கலந்துகொண்டு தங்களை வாழ்த்துமாறு மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர் படக்குழுவினர். இதற்காக ஐதராபாத் அருகில் உள்ள யூசுப்குடாவில் உள்ள கோட்லா விஜயபாஸ்கர் ரெட்டி அரங்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.