சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
யங் டைகர் என டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தான் நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குனருக்கும் விலை உயர்ந்த பரிசை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ஜெய் லவகுச படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் பாபிக்கு விலை உயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி பாபியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். ஜெய் லவகுச படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகிகளுக்கான தேர்வில் படக்குழு தற்போது பிசியாகவுள்ளது. இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் அதில் ராக்ஷி கண்ணா மட்டும் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கின்றார் என்பது ஏற்கனவே அறிந்ததே. ஜெய்லவகுச படத்தை ஆகஸ்ட் 11ல் வெளியிட திட்டமிட்டிருப்பதாக பாபி கூறியுள்ளார்.