டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் கைரளி சேனலில் நடிகை ஊர்வசி ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசுகிற நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ஆண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல ஆண்கள் தங்களை ஊர்வசி திட்டி அவமானப்படுத்தியதாக மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாரின் மீது வருகிற டிசம்பர் 9ந் தேதி விசாரணை நடத்துகிறது.




