சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. பிரபலம் இல்லாத நட்சத்திரங்களை வைத்து சிதம்பரம் என்பவர் இயக்கிய இந்த படம் கிட்டதட்ட 20 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி 230 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள காமெடி நடிகரும் , யக்குனருமான சவ்பின் சாஹிர் தான் இந்த படத்தை தனது தம்பி மற்றும் நண்பருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
அதேசமயம் படம் வெளியாகிய சில மாதங்கள் கழித்து கேரளாவை சேர்ந்த சிராஜ் ஹமீது வளையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக தான் எட்டு கோடி கொடுத்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீதம் கொடுப்பதாக கூறியவர்கள் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலீசார் இது குறித்த விசாரணையை துவங்கி இது தொடர்பாக பல ஆதாரபூர்வ தகவல்களை திரட்டி இருக்கிறார்கள்.
அதேசமயம் நீதிமன்றத்தில் கடந்த வாரமே ஆஜராக வேண்டிய சவ்பின் சாஹிர் ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு கேட்டுள்ளார். அந்த வகையில் வரும் ஜூன் 26ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அது மட்டுமல்ல இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதற்காக முன்ஜாமினுக்கும் விண்ணப்பித்துள்ளார் சவ்பின் சாஹிர். ஆனால் கேரள போலீசார் இந்த வழக்கில் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் சவ்பின் சாஹிரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டி இருக்கிறது. அதனால் அவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை விசாரணைக்கு பிறகு பின்பு இது குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பது தெரிய வரும்..