ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகர் மம்முட்டியின் படங்கள் இந்த வருடம் கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மம்முட்டி. அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் தற்போதைய புதிய போட்டோ ஒன்று தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில் வைத்துவிட்டு மொபைல் போனில் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த புகைப்படத்தில் அவரது காலில் கொலுசு அணிந்திருப்பதால் இது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பஷூக்கா' திரைப்படத்திற்காக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.