டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சமீபத்தில் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், பிரியாமணி நடிப்பில் 'ஆபீஸர் ஆன் டூட்டி' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சில டீனேஜ் இளைஞர்கள் அதை விற்கும்போதும் அதன்பிறகு தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கும் போதும் சில வேண்டத்தகாத செயல்களை செய்கின்றனர். அவர்களை பிடிக்கும் பணியில் இறங்குகிறார் ரப் அன்ட் டப்பான போலீஸ் அதிகாரியான குஞ்சாக்கோ போபன். 'நான் மகான் அல்ல' படத்திற்குப் பிறகு தவறு செய்யும் டீன் ஏஜ் இளைஞர்களை நாயகன் துவைத்து எடுக்கும் காட்சிகளுக்கு கைதட்டல் கிடைத்தது என்றால் அது இந்த படமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமான வில்லத்தனமான நடிப்பை இதில் நடித்த டீனேஜ் இளைஞர்கள் அனைவரும் வழங்கியிருந்தனர்.
சமீபத்தில் அவர்கள் அளித்த பேட்டியில், “இந்த படத்தில் நாங்கள் அடிக்கடி போதைப்பொருள் உபயோகிப்பதாக காட்சிகள் நிறைய இருக்கும். அதற்காக நாங்கள் படப்பிடிப்பின் போது குளுக்கோஸ் பவுடரை கொட்டி அதை நுகர்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் அடிக்கடி அதை நுகர்ந்ததால் அதன் இனிப்பு தன்மை அதிகமாக ஏறி தொண்டையில் சென்று அடைத்துக் கொண்டது. அதன்பிறகு அன்றைய தினம் இரவு முழுவதும் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டோம். இந்த குளுக்கோஸை பயன்படுத்தி நடிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. ஆனால் படம் வெற்றியடைந்து எங்களது காட்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதை பார்க்கும்போது அதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை” என்று கூறியுள்ளனர்.