அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
பிரபாஸ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்கி 2898 ஏடி என்கிற திரைப்படம் வெளியாகி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து பிரபாஸ் தற்போது இயக்குனர் மாருதி இயக்கத்தில் ராஜா சாப், ஹனுராகவ புடி இயக்கத்தில் உருவாகும் ஒரு படம், மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதில் ராஜா சாப் படம் அடுத்து வெளியாகும் விதமாக விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தின் வேலைகளும் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக, இல்லையில்லை வில்லன்களாக பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதியான சைப் அலிகான் - கரீனா கபூர் இருவரும் நடிக்க இருக்கிறார்கள் என்று தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. இப்படி ஒரு நட்சத்திர தம்பதி ஒன்றாக இணைந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது அநேகமாக இதுதான் முதன்முறையாக இருக்கும். தவிர இன்று (செப்-27) வெளியாகி உள்ள தேவரா திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் நடிகர் சைப் அலிகான் அடியெடுத்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.