மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். மோகன்லால் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள முக்கியமான கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் அவர்களது கதாபாத்திர போஸ்டர்களுடன் தினசரி அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் முக்கிய அரசியல்வாதியாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வில்லன் நடிகர் சாய்குமார் நடித்திருந்தார். தற்போது இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்பதை அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் எம்புரான் படக்குழுவினர்.
அதே சமயம் லூசிபர் படத்தில் தான் நடிக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டதையும் நான் நடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் செய்த மாற்றத்தையும் தற்போது ஒரு வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் சாய்குமார். படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தன்னை அணுகிய போது தனக்கு காலில் அடிபட்டுள்ளதால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம் சாய்குமார். அதன் பிறகு இயக்குனரான பிரித்விராஜ் அவருடன் தொடர்பு கொண்டு எதற்காக மறுக்கிறீர்கள் என்று காரணம் கேட்டபோது தனக்கு காலில் அடிபட்டு உள்ளதால் இயல்பாக நடக்க முடியாது என்றும் தனது கதாபாத்திரத்திலும் அது பிரதிபலிக்கும் என்பதால் தான் நடிக்க மறுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
உடனே பிரித்விராஜ் நீங்கள் நடக்க முடியாமல் காலை தாங்கி தாங்கி நடந்து வந்தால் உங்கள் கதாபாத்திரத்தை அதேபோலவே வைத்து விடுவேன். நீங்கள் வீல் சேரில் தான் நடமாடுகிறீர்கள் என்கிற நிலை இருந்தால் படத்தில் உங்களது கதாபாத்திரத்தையும் அதே போல மாற்றி விடுவேன். ஆனால் நீங்கள் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என கூறி லூசிபர் படத்தில் சாய்குமாரை நடிக்க வைத்தாராம். பிரித்விராஜின் தந்தை சுகுமாரனும் நானும் நண்பர்கள் என்பதால் என் மீது எப்போதுமே பிரியம் வைத்துள்ளவர் பிரித்விராஜ். எனக்காக கதாபாத்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தது அவரது பெருந்தன்மை என்று கூறியுள்ளார் சாய்குமார்.