காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கைதான 7 பேருக்கும் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.