விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை |

மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான கதாசிரியராக வலம் வருபவர் ரெஞ்சி பணிக்கர். மம்முட்டி நடித்த கிங், சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் மற்றும் இவர்கள் இணைந்து நடித்த கிங் அண்ட் கமிஷனர் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல பரத் சந்திரன் ஐபிஎஸ் மற்றும் ரவுத்திரம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கடந்த 10 வருடங்களாக ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறி பிஸியான நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் இவர் கதை எழுதும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் இயக்க உள்ள புதிய படம் ஒன்றுக்கு கதை எழுதி வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றை கதை எழுதி இயக்க உள்ளார் ரெஞ்சி பணிக்கர். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பஹத் பாஸில் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த 2008ல் மம்முட்டி நடித்த ரவுத்திரம் படத்தை இயக்கிய ரெஞ்சி பணிக்கர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் டைரக்சனுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.




