பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை தொடப் போகிறது. அடுத்ததாக அவர் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படமும் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம். இந்த நிலையில் இந்த இடைவெளியை சமப்படுத்தும் விதமாக ராஜமவுலி இயக்கத்தில் ரவிதேஜா நடிப்பில் கடந்த 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரமார்குடு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை 27ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அனுஷ்கா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ரவிதேஜா போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்ல இந்த படத்தை தமிழில் சிறுத்தை என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்த கார்த்தியின் திரையுலக பயணத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.