'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் |
நடிகர் மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற இடியன் சந்து என்கிற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த சட்டையை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். வெள்ளை நிறத்தில் மம்முட்டி அணிந்து வந்த சட்டையில் யாரோ தவறுதலாக பேனாவில் இருந்த ஊதா மையை தெளித்து விட்டார்களோ என்று நினைக்கும் விதமாக அந்த சட்டை இருந்தது. ஆனால் உண்மையில் அந்த விதமான டிசைனில் அந்த சட்டை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டையை வடிவமைத்தவர் துபாயில் இருக்கும் ஜெஸ்பர் கோட்டக்குன்னு என்பவர் தான். மம்முட்டியின் தீவிர ரசிகரான இவர் கடந்த சில வருடங்களாக கழுத்துக்கு கீழே உடல் இயங்காத வகையில் ஒரு விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மம்முட்டியை எப்படியும் சந்தித்து விட வேண்டும், அப்போது அவருக்கு ஒரு பரிசும் அளிக்க வேண்டும் என்பதற்காக தானே பிரத்யேகமாக துணியை வரவழைத்து தனது பற்களுக்கு இடையே தூரிகையை பிடித்தபடி துணியில் டிசைன் செய்து பின்னர் அதை சட்டையாக மாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்முட்டி தான் நடித்த டர்போ என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக துபாய் வந்தபோது அங்கிருந்த மம்முட்டிக்கு நெருங்கிய ஒரு நண்பரின் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு ஜெஸ்பருக்கு கிடைத்தது.
அப்போது தான் உருவாக்கிய சட்டையை கொடுத்ததுடன், இதேபோன்று தான் வரைந்திருந்த மம்முட்டியின் ஓவியம் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார் ஜெஸ்பர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மம்முட்டி அந்த சட்டையை பயன்படுத்தாமல் அப்படியே மறந்து விட்டாரோ என்கிற சந்தேகம் ஜெஸ்பருக்கு இருந்தது. இந்த நிலையில் தான் மறக்காமல் அந்த சட்டையை ஒரு விழாவிற்கு அணிந்து வந்து தனது ரசிகரின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார் மம்முட்டி.