கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சவ்பின் சாஹிர், தனது சகோதரர் மற்றும் நண்பருடன் இணைந்து இந்த படத்தையும் தயாரித்திருந்தார். அதே சமயம் கேரளாவை சேர்ந்த சிராஜ் வளையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாகவும் கூறிய தயாரிப்பாளர்கள் தன்னிடம் சொன்னபடி பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார்கள் என வழக்கு தொடர்ந்தார். தற்போது இது குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆர்டிஎக்ஸ் என்கிற படத்தின் தயாரிப்பாளர் மீதும் இதேபோன்று ஒரு புகார் போலீஸில் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருப்பணித்துராவை சேர்ந்த அஞ்சனா ஆபிரகாம் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் மற்றும் டொவினோ தாமஸ் நடித்த மின்னல் முரளி உள்ளிட்ட படங்களை தயாரித்த சோபியா பால் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அஞ்சனா ஆபிரகாம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது : “தயாரிப்பாளர் சோபியா பால் ஆர்டிஎக்ஸ் படத்தை தயாரிப்பதற்காக ஆறு கோடி ரூபாய் பணம் கேட்டார். படம் வெளியானதும் லாபத்தில் 30 சதவீதம் சேர்த்து தருவதாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் இப்போது வரை லாப பங்குத்தொகை எனக்கு தரவில்லை. அது மட்டுமல்ல நான் கொடுத்த பணத்தில் கூட மூன்று கோடி ரூபாயை மட்டுமே, அதுவும் பலமுறை திருப்பி கேட்ட பின் கொடுத்துள்ளனர். மேலும் 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாவதாக என்னிடம் சொன்னவர்கள் அதன்பிறகு படம் முடிந்ததும் 23 கோடி ரூபாய் செலவாகிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அது பற்றி என்னிடம் முன்கூட்டியே தகவலும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு அதற்கான கணக்கையும் என்னிடம் காட்டவில்லை. எனக்கு பணம் தராமல் மோசடி செய்யும் விதமாகவே இவர்களது செயல் இருக்கிறது. எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.