சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நானி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனின் நடித்து விட்டனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுவரை ராஜமவுலி டைரக்சனின் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாக ராஜமவுலியின் தந்தையும் அவரது படங்களின் கதை இலாக்காவில் முக்கிய பங்கு வகிப்பவருமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார் இந்த படத்தின் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் மகேஷ்பாபு தற்போது தனியாக சென்று ஜெர்மனிக்கு பயணம் கிளம்பி சென்றுள்ளதும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.