அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த சலார் படத்தின் முதல் பாகம் வெளியானது. கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களில் குறிப்பாக பாகுபலி வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் சலார் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளது. அதே சமயம் கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு இந்த படம் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது.
மேலும் மற்ற மொழி கதாநாயகன்களை வில்லனாக்கி அழகு பார்க்கும் ட்ரெண்டில் நடிகர் பிரித்விராஜுக்கும் இந்த படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் சலார் படக்குழுவினர் இந்த படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இயக்குனர் பிரசாந்த் நீ, நாயகன் பிரபாஸ், தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோருடன் இந்த கொண்டாட்டத்தில் பிரித்விராஜும் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.