ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் மாமுகோயா. யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போன இவர் காமெடியிலும் தனது முத்திரையை பதித்தார். கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் கோழிக்கோட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மோகன்லால் அங்கே இருக்கும் மாமுகோயாவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மோகன்லாலுடன் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுவும் உடன் சென்றிருந்தார்.
மோகன்லாலும், மாமுகோயாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று. மாமுகோயா இறந்த சமயத்தில் மோகன்லால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. தற்போது கோழிக்கோடு நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தானாகவே மாமுகோயாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால்.




