கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
பிருத்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜன கண மன' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. அடுத்து அவர் இயக்க இருக்கும் படம் பற்றி எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது. இந்த நிலையில் அவர் நிவின் பாலியுடன் அடுத்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு 'மலையாளி பிரம் இந்தியா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி, நடிகர் நிவின் பாலியை ஜிம்மில் சந்தித்து கதை சொல்கிறார். அதற்கு நிவின் பாலி பல கேள்விகளை கேட்கிறார். இந்த கேள்வி பதில் வாயிலாக படம் பற்றிய தகவல்கள் காமெடியாக பகிரப்படுகிறது. கடைசியாக படத்தின் டைட்டிலை கேட்கிறார் நிவின் பாலி அதற்கு 'மலையாளி பிரம் இந்தியா' என்று சொல்கிறார். இந்தியாவா? பாரதமா? என்று கேட்கிறார் நிவின். இப்படி கடைசியாக அரசியல் பன்ஞ்சோடு முடிகிறது டைட்டில் வீடியோ. இது இப்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில் நிவின் பாலி தவிர, தயன் ஸ்ரீனிவாசன், அனஸ்வாரா ராஜன், ஷைன் டைம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.