குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 108வது படமான 'பகவந்த் கேசரி' படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக சிறப்பு வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவில் கடந்த 8 மாதங்களில் படப்பிடிப்பு 24 இடங்களில், 12 பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி முடிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.