டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‛ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக சில நிமிடங்கள் வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் மோகன்லால். அவர் மலையாளத்தில் ஏற்கனவே நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் என்கிற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்கா கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.
அங்கே மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 3000 துணை நடிகர்கள் பங்கேற்கும் ஒரு சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளார் பீட்டர் ஹெய்ன். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் இந்த சண்டைக்காட்சி மிகவும் ஹைலைட்டான ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக புலி முருகன் மற்றும் ஒடியன் ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




