'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் | அமிதாப் பர்ஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் ; ரஜினிகாந்த் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் - வேட்டைன் இயக்குனர் ஒப்பீடு | பிக்பாஸ் வீட்டில் இரண்டு பேருக்கு காலில் பிரச்னையா? |
மலையாள திரை உலகில் 40 ஆண்டுகளாக நடிகர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருபவர் நடிகர் சீனிவாசன். இவரும், நடிகர் மோகன்லாலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நிஜத்திலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். இருந்தாலும் நடிகர் சீனிவாசன் அவ்வப்போது வெளிப்படையாக பேசுகிறேன் என சில விஷயங்களை தனது பேட்டிகளில் பேசி விடுவது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பேசிய பேட்டி ஒன்றில் அந்த சமயத்தில் மறைந்த ஒரு இயக்குனர் பற்றி பேசும்போது அவருக்கு மோகன்லால் உரிய நேரத்தில் கால்சீட் தராமல் இழுத்தடித்தார் என்பது போன்று ஒரு தகவலை கூறினார். இது அப்போது மலையாள திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போதுதான் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு குணமடைந்து வந்ததால் நடிகர் சீனிவாசன் இப்படி பேசிய கருத்துக்கு பதிலடியாக யாரும் அவருக்கு பதில் அளிக்கவில்லை. அவரது மூத்த மகனும் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் கூட தன் தந்தை ஏன் இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை என்றும் அவரது பேச்சு தனக்கு வருத்தம் அளித்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அப்படியே உல்டாவாக சீனிவாசனின் இளைய மகனும் நடிகரும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவருமான தயன் சீனிவாசனின் சர்ச்சை பேச்சுக்கு அவரது அம்மா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த படப்பிடிப்பில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஒரு கருத்தை கூறியிருந்தார் தயன் சீனிவாசன்.
அதாவது டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகர் மலையாள திரையுலக படப்பிடிப்பு தளங்களில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதால் தன் மனைவி தனது மகனை சினிமாவில் நடிக்க அனுமதிக்க மறுக்கிறார் என ஒரு தகவலை கூறினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தயன் சீனிவாசன் அளித்த பேட்டி ஒன்றில், யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி போதை பொருளை திணிக்க முடியாது.. அவரவர்களுக்கு நல்லது கெட்டது என்பது தெரியும் தானே” என்று ஒரு பதில் கொடுத்திருந்தார்.
இவர் இது போன்ற அவ்வப்போது பேட்டிகளில் சர்ச்சையாக பதில் கூறி விமர்சனங்களுக்கு ஆளாவது வழக்கம் தான். இந்த நிலையில் இவரது அம்மா விமலா சீனிவாசன் தன் மகனது இந்த சுபாவம் குறித்து கூறும்போது சில நேரங்களில் எதார்த்தமாக பேசுகிறேன் என கூறி தனது மகன் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் என்றும், அவரது பேச்சு சில நேரங்களில் எனக்கே வருத்தம் அளிப்பதாக இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்படி தந்தையின் பேச்சுக்கு மூத்த மகன் வருத்தம் தெரிவித்ததும் இளைய மகனின் பேச்சுக்கு தாய் வருத்தம் தெரிவித்ததும் திரை உலகில் அபூர்வமான ஒரு விஷயமாக தான் தெரிகிறது.