கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

மோகன் குருசெல்வா இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் படம் ‛காட்ஸ் ஜில்லா'. இது ரஜினிகாந்த்தின் ‛அதிசய பிறவி' பாணியில் பேண்டசி ஜானரில் உருவாகிறது. இது குறித்து தர்ஷன் கூறுகையில், ‛‛நான் நடித்த நாடு படத்துக்கு நல்ல வரவேற்பு. இன்றும் அந்த கரு பற்றி வியந்து பேசுகிறார்கள். அதற்கடுத்து நடித்த சரண்டர் படம் ஓடிடியில் ஹிட். அதனால் மக்கள் விரும்பும் ஜனரஞ்சக கதையில் நடிக்க விரும்பியபோது இந்த கதை வந்தது.
இது ரொமாண்டிக் காமெடி சப்ஜெக்ட். ரஜினிகாந்த் நடித்த அதிசிய பிறவி மாதிரி பேண்டசி அதிகம். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய, இரண்டு ஹீரோயின் இருக்கிறார்கள். என் பிறந்தநாள் இந்த பட பூஜை படப்பிடிப்பு தொடங்கியது மகிழ்ச்சி. காட்ஸில்லா என்பது வேறு அர்த்தம். இது காட்ஸ் ஜில்லா என்பது வேறு. இதன் அர்த்தம் விரைவில் தெரியவரும். புராண கற்பனை கதை, நகைச்சுவை, காதலில் தோற்ற இளைஞன் வாழ்வில் தெய்வீக சக்தி என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது'' என்றார்.