நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
தெலுங்கு திரையுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் குணசேகர். மகேஷ்பாபுவுக்கு ஒக்கடு படத்தின் மூலம் மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத்தந்த இவர், தொடர்ந்து அவரை வைத்து சில வெற்றி படங்களை கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அல்லு அர்ஜுன், அனுஷ்கா, ராணா நடிப்பில் ருத்ரமாதேவி என்கிற படத்தை இயக்கினார்.
தற்போது சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் குணசேகர். இந்த நிலையில் இவரது மகள் நீலிமாவுக்கும் ரவி பிரக்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.