மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உடனடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அப்படி வெளியிட்ட இடங்களிலெல்லாம் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் புது சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு முன்னதாக கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் கன்னட சினிமாவில் முதன்முதலாக பல சாதனைகளை படைத்தன. அது மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பல சாதனைகளைப் படைத்த முதல் கன்னடப்படம் என்கிற பெருமையும் அதற்கு கிடைத்தது.
இந்தநிலையில் காந்தாரா திரைப்படமும் கேஜிஎப் படத்தை போல சில சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் கே ஜி எப் படத்தின் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான காந்தாரா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் தெலுங்கில் பெற்ற வசூலை ஓவர்டேக் செய்திருந்தது. இந்த நிலையில் வெளியான 13 நாட்களில் தெலுங்கில் கமலின் விக்ரம் படம் வசூலித்த தொகையை தற்போது தாண்டியுள்ளது காந்தாரா. இப்போது வரை தெலுங்கில் 45 கோடி வசூல் செய்துள்ள காந்தாரா, இன்னும் சில நாட்களில் 50 கோடி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.