அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் |
தமிழ் திரையுலகில் அரவிந்த்சாமி, மலையாள திரையுலகில் குஞ்சாக்கோ போபன் இருவருமே அவர்கள் அறிமுகமான காலகட்டத்தில் ஏராளமான இளம் ரசிகைகளின் கனவு நாயகர்களாகவே வலம் வந்தனர். இந்தநிலையில் பல வருடங்கள் கழித்து இந்த இருவரும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஓட்டு என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் ரெண்டகம் என்கிற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, அரவிந்த்சாமி ஒரு மிகச்சிறந்த குக் என்பதை மும்பையில் தான் தெரிந்து கொண்டேன் என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து குஞ்சாக்கோ கூறும்போது, “மும்பையில் நானும் அரவிந்த்சாமியும் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்த சென்றபோது அங்கிருந்த செப்கள் இரண்டு பேர் அரவிந்த்சாமி மிகச்சிறந்த குக் என்றும் அவர் சமைக்கும் உணவுகளின் சிறப்பு பற்றியும் பாராட்டி பேசினார்கள். அதற்கு முன்னதாக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது அரவிந்த்சாமி சமைத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்களாம். அதுமட்டுமல்ல, அரவிந்த்சாமியின் மகள் சென்னையில் நான்கு நாட்கள் உணவு திருவிழா ஒன்றையும் நடத்தி உள்ளாராம். இந்த தகவல்களை எல்லாம் அப்போது கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அந்த சமயத்தில் அரவிந்த்சாமி எனக்கு ஒரு ஆபர் கொடுத்தார்.. அதாவது அவர் அடுத்த முறை அவர் கேரளா வரும்போது என்னுடைய வீட்டிற்கு வருவதாகவும் எனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தருவதாகவும் கூறினார். எனது வீடு அந்த அளவுக்கு பெரிதாக இல்லையே என்று தயங்கினேன்.. எனக்கு சமைப்பதற்கு ஒரு கிச்சன் மட்டும் கொடுங்கள்.. அது போதும் என்று கூறினார் அரவிந்த்சாமி. அவர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் குஞ்சாக்கோ போபன்.