ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இவர், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ரசிகர்களிடையேயும் ரொம்பவே பிரபலமானவர். பிரேமம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்கு பின் தற்போது மலையாளத்தில் கோல்டு என்கிற தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதனால் சில நாட்களுக்கு முன்பு, ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக செப்-8ல் இந்தப்படம் வெளியாகும் என்று உறுதியாக கூறிய அல்போன்ஸ் புத்ரன், அதேசமயம் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப்படம் ஓணம் பண்டிகையில் வெளியாகாது என்றும் இன்னும் படத்தின் பணிகள் பாக்கி இருப்பதால் அதற்கு அடுத்த ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்காக ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.