ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த இரண்டு படங்களின் மூலம் கேரளாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார். அதேசமயம் பிரேமம் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வேறு எந்த படமும் இயக்காமல் இருந்தவர், தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரித்விராஜின் பலவிதமான முக பாவங்களை வைத்து புதிதாக ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ரசிகர்களுடன் உரையாடும்போது இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் ரிலீசுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டும் படம் ரிலீசுக்கு முன்பாக வெளியிடப்படும் என்று கூறி ரசிகர்களை சமாதானப்படுத்தியும் உள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.. அந்த பாடல் நேரம் படத்தில் கிளைமாக்ஸில் வெளியாகி ஹிட்டான பிஸ்தா பாடல் பாணியில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.