திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் ஹீரோ பைஜு என்கிற படம் வெளியானது. அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்டு ரொம்பவே எதார்த்தமான பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலமாக, பல புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகினர். சமீபத்தில் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அப்படி இந்த படத்தில் கிளைமாக்ஸில் நிவின்பாலியுடன் மோதும் முரட்டு வில்லனாக நடித்து இருந்தவர் என்.டி பிரசாத். இந்த படத்தின் மூலம் ஓரளவு பிரபலமான இவர் அதற்கடுத்து சில படங்களிலும் நடித்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருட்களை பயன்படுத்தினார் என இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. வழக்குகளின்ன் தீவிரம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.