விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவரும். இதில் சுரேஷ்கோபி இடையில் அரசியலில் நுழைந்து, நடிப்பை விட்டு ஒதுங்கினாலும் தற்போது மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பல நிகழ்வுகளில் இவர்கள் மூவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தற்போது தான் மீண்டும் முதன்முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ்கோபியின் பிறந்தநாள் என்பதுடன் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாலும் இந்த அதிசய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. பொதுக்குழு கூட்டத்திலேயே சுரேஷ்கோபியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லாலும் மம்முட்டியும் இதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சுரேஷ்கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.




