ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல மலையாள நடிகர் திலீப்பிற்கு விசாரணை என்கிற பெயரில் அடுத்தடுத்து சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் திலீப்.
அதன்பிறகு அந்த வழக்கை விசாரிக்கும் சில விசாரணை அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டார் என்றும் பாதிக்கப்பட்ட நடிகையின் கடத்தல் வீடியோக்களை தனது மொபைலில் பார்த்தார் என்றும் அவரது நண்பராக இருந்து எதிராக திரும்பிய இயக்குனர் பால சந்திரகுமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டாவதாக அவர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழக்கு பதியப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக போராடி ஒரு வழியாக இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் திலீப்.
அதற்கு முன்னதாக கேரள கிரைம் பிராஞ்ச் போலீசார் முன்பாக தொடர்ந்து மூன்று நாட்கள் 33 மணி நேரம் விசாரணைக்கு திலீப்பும் அவரது சகோதரரும் அவரது மைத்துனரும் ஆஜராகினர். அந்த சமயத்தில் அவர்களது மொபைல் போன்கள் அனைத்தும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனைக்காக பாரன்சிக் லேபுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தநிலையில் பாரன்சிக் சோதனைகள் முடிந்து அதன் ரிசல்ட் போலீசார் வசம் வந்துவிட்டதாகவும் அதனடிப்படையில் மீண்டும் திலீப் இடம் பல கேள்விகளை கிரைம் பிராஞ்ச் போலீசார் கேட்க இருப்பதாகவும் ஒரு தகவல் போலீஸ் வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் திலீப் மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றே தெரிகிறது.