வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோக்களுக்கு இப்போதும் டப் கொடுக்கும் வகையில் ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. தற்போது சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படமான அகண்டா வரும் டிச-2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணி நேரம் 47 நிமிடம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
படத்தின் நீளமான இந்த ரன்னிங் டைம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பாலகிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்களின் படங்கள், இரண்டே கால் மணி நேரத்திற்குள் இருந்தால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக இருக்கும், ஒருவேளை படத்தின் சில காட்சிகள் போரடிக்க ஆரம்பித்தால் அது படத்தின் மொத்த ரிசல்ட்டையும் பாதித்துவிடும் அபாயம் இருக்கிறது என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்களாம்.