Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கருப்பம்பட்டி

கருப்பம்பட்டி,Karuppampatti
23 மார், 2013 - 14:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கருப்பம்பட்டி

தினமலர் விமர்சனம்இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்துள்ள இயக்குனரின் படைப்பு எனும் கேப்ஷனுடன் விளம்பரம் செய்யப்பட்டு வரும் "கருப்பம்பட்டி", உறவுகளின் உன்னதத்தை சொல்லும் விதத்தில் மெய்யாலுமே கருப்பட்டி வெல்லமாக இனித்திருக்கிறது என்றால் மிகையல்ல!

கதைப்படி தனது கிராமத்து கலாச்சாரத்தையும், தன் பெற்றோர் உள்ளிட்ட கிராமத்து மக்களையும் வெறுத்து ஒதுக்கும் ஹீரோ, அந்த கிராமம் மொத்தத்தையும் அடமானம் வைத்துவிட்டு, அந்தகாசில் மேலைநாட்டு நாகரீகத்தை விரும்பி பிரான்ஸ் நாட்டில் போய் செட்டில் ஆகிறார்! அங்கு அந்தநாட்டுப் பெண்ணை திருமணமும் செய்து ஒரு குழந்தைக்கும் அப்பா ஆகிறார். மேலைநாட்டு நாகரீகத்தில் வளர்ந்த மனைவி நம் ஹீரோவுக்கு துரோகம் செய்ய, ஹீரோ போதை மருந்துக்கு அடிமையாகிறார். அப்புறம்? அப்புறமென்ன போதை பழக்கத்தால் போய் சேருவதற்கு முன் வளர்ந்து ஆளாகும் தன் மகனிடம் தான் செய்த துரோகம் மொத்தத்தையும் சொல்லி செத்துபோகிறார். மற்றொரு ஹீரோவான மகன் அப்பாவின் துரோகத்திற்கு பிராயசித்தம் தேடும் விதமாக அடமானத்தில் கிடக்கும் கருப்பம்பட்டியை மீட்டு, சிதறுண்டு கிடக்கும் சொந்த பந்தங்களை ஒன்று சேர்த்து, அந்த உறவிலேயே ஒரு பெண்ணை காதலித்து, கரம்பிடித்து, இந்தியன் சிட்டிசன் ஆகிறார். இதுதான் "கருப்பம்பட்டியின் கரு, கதை, களம் எல்லாம்!

அப்பா, மகன் என டபுள் ஆக்டிங்கில் அஜ்மல் அசத்தல்! அதிலும் மேலைநாட்டு கலாச்சாரத்தை விரும்பும் அப்பாவாகவும், சொந்த கிராமத்தையும் சொந்த பந்தங்களையும் விரும்பும் மகனாகவும், அஜ்மல் இருவேறு துருவங்களிலும் நின்று அஜ்மல் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அப்பா வெறுத்து ஒதுக்கிய தன் தாத்தாவை தேடிப்பிடித்து, மொத்த கருப்பம்பட்டி சொந்தங்களையும் தேடிப்பிடிக்க கார்ட்ப‌ோர்டு ‌சீட்டில் ஸ்கெட்ச் போட்டு, உறவுப்பையன் ஜெகனுடன் சேர்ந்து கொண்டு சாப்ட்வேர் கோடீஸ்வரர் பில்கேட்ஸின் ரெப்பரஸென்டேடீவ்ஸ்... இந்திய கிராமங்களை தத்தெடுக்கும் டீமின் லீடர் என்று கருப்பம்பட்டி உறவுகளை பொங்கல் திருநாளில் அவர்களது கிராமத்திலேயே ஒன்று சேர்த்து பொங்கல் கொண்டாட வைப்பது சூப்பர்ப்!

அப்பா காதலி சாந்தியாகவும், மகனின் காதலி காவேரியாகவும் அபர்ணா பாஜ்பாய் ஒரு சாயலில் அசின் மாதிரி தெரிந்து, நம் நெஞ்சில் பிசின் போட்டு ஒட்டிக்கொள்கிறார். அப்பா அஜ்மலை ஒரு தலையாக காதலித்தாலும், அவரை நினைத்து இருதலை கொள்ளி எறும்பாக வாழ்ந்து மடிந்தாலும், அப்பாவின் காதலி மகள், அவரது மகனுக்கு தங்கை முறை உறவில்தானே வரவேண்டும்....?! எங்கோ லாஜிக் இடிக்கிறதே...? என‌ யோசிப்பவர்களுக்கு இயக்குனர் பிரபுராஜ சோழன் தான் பதில் சொல்ல வேண்டும்! அதுபோகட்டும்... சாந்தியாகவும், காவேரியாகவும் வரும் அபர்ணா அபாரமண்ணா...!!

கல்லூரி ஹாஸ்டல் வார்டன், கம் புரபசர் ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கர், செல்லாது செல்லாது... என்படியே சிரிப்பு மூட்டும் கருப்பு ஜெகன், ஸ்ரீநாத், மகாதேவன், கணேஷ்கர், சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பலம்!

கண்ணனின் இசையில், கபிலனின் பாடல் வரிகள், அதிலும் பாலிவுட் பிரபலம் பப்பிலகரி பாடியிருக்கும் 1980களில் பிரபலமான டிஸ்கோ பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் அசத்தல்! சந்தோஷ் ஸ்ரீராம் - சஞ்சீவ் இருவரது ஒளிப்பதிவும் தூள். பிரான்ஸை இவ்வளவு பிரமாதமாக இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டியதில்லை என்பது ப்ளஸ்! பி.லெனினின் படத்தொகுப்பு, பிரபுராஜ சோழனின் எழுத்து - இயக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கின்றது!

ஆகமொத்தத்தில், "கருப்பம்பட்டி" - "கலெக்ஷ்ன்பெட்டி"!!வாசகர் கருத்து (7)

ramya - Singapore,சிங்கப்பூர்
02 ஏப், 2013 - 11:41 Report Abuse
ramya இந்த படம் நல்லா இருக்கு. என்னோட அக்கா பையன் நடிச்சிருக்கான். ஆமாம், அந்த குண்டு பையன் தான். அவன் எப்படி நடிச்சிருக்கான்? உங்க commentஸ் ச சொல்லுங்க
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
03 ஏப், 2013 - 13:21Report Abuse
ரெட்டைவால் ரெங்குடுநன்றாக நடித்திருக்கிறார்.. நல்ல குணசித்திர நடிகராக வர வாழ்த்துக்கள். (தவறாக என்ன வேண்டாம்.. உடம்பை குறைக்க சொல்லுங்கள்.. உடல் நலத்துக்கு நல்லது இல்லை... உணவை குறைக்காமல் உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். குண்டாக இருந்தால்தான் குழந்தை நட்சதிரம் என்பதெல்லாம் சும்மா.. 'ஹரிதாஸ்' படம் ஒரு எடுத்துகாட்டு)...
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
31 மார், 2013 - 12:29 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு செம ஸ்டோரி.. முழு பாராட்டும் இயக்குனருக்கே... அருமையான திரைகதை... அஜ்மல் அக்டிங் செயற்கை.. எப்பா நடிகை செம மொக்கை.. காமெடி 3 பெரும் சூப்பர். கட்டாயம் மியூசிக் கவனம் செலுத்தி இருக்கனும். சுப்டிட்லே போடாத பிரெஞ்சு மொழி கலந்துரையாடல்.. இயக்குனருக்கு வாழ்த்துக்கள். கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம்.
Rate this:
raja - nagai  ( Posted via: Dinamalar Android App )
30 மார், 2013 - 10:45 Report Abuse
raja super film... good family entertaing film..
Rate this:
syed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 மார், 2013 - 15:56 Report Abuse
syed படம் நல்ல இருக்கு, ஆஅனால் இசைல கவனம் பண்ணி இருந்த நல்ல இருக்கும்.இஜ்மல் அக்டிங் சூப்பர் .. சையத் -துபாய் .
Rate this:
syed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 மார், 2013 - 12:55 Report Abuse
syed படம் நல்லா இருக்கு. எல்லா உறவுக்காரங்களுடே சேருவது மனதுக்கு மகிழ்ச்சி. ஆனால் பாட்டுக்கு நல்லா வந்து இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் -இலியாஸ்-துபாய் .
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in