Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தோனி

தோனி,Dhoni
21 பிப், 2012 - 16:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தோனி

 

தினமலர் விமர்சனம்ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதாவது... எனும் கதையில் இருக்கும் நம் நாட்டின் கல்விமுறையை களைய வேண்டும் எனும் கருத்தை "நண்பன்" படத்தில் காமெடியாக லைட்டாக எடுத்துரைத்திருந்தார் ஷங்கர். அதே கருத்தை தோனியில் சீரியஸாக, வெயிட்டாக சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்! "தோனி" படம் அல்ல... பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்வி முறைகளுக்கும் பாடம்! என்றால் மிகையல்ல!!

கதைப்படி வாங்கும் சம்பளம் வாய்க்கும், வயிற்றுக்கும் பத்தாமல் ஊறுகாய் வியாபாரம், ஊரைச்சுற்றிக்கடன் என்று வாழ்க்கையை ஓட்டும் ரிஜிஸ்தர் ஆபிஸ் கிளார்க் பிரகாஷ்ராஜ். மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் நரக வேதனை நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து பெரிய ஆளாக்கும் கனவில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரது கனவை நனவாக்கும் விதமாக பெண் பிள்ளை, ஸ்ரீஜிதா பொறுப்பாக படிக்கிறார். ஆனால் ஆண் பிள்ளை மாஸ்டர் ஆகாஷோ படிப்பில் ஜீரோ வாங்கிவிட்டு, கிரிக்கெட்டில் சிக்ஸராக அடிக்கிறார். இதனால் அவர் படிக்கும் ஹைஸ்டேண்டட் ஸ்கூலில் கண்டனக்குரல்கள் எழுந்து, அது பிரகாஷ்ராஜின் காதுகளை துளைக்கிறது. அதன் விளைவு... மகனை கண்டிக்கிறேன் பேர்வழி... என மாஸ்டர் ஆகாஷை அடிக்க, அது படாத இடத்தில் பட்டு ம‌கன் கோமா ஸ்டேஜூக்கு போகிறார். அப்புறம்? அப்புறமென்ன... சமூகத்தையும், இச்சமூகத்தில் தற்பொழுது தரப்படும் கல்விமுறையையும் சாடும் பிரகாஷ், சாகக்கிடக்கும் மகனை எவ்வாறு காப்பாற்றுகிறார், சமூகத்துடன் எப்படி போராடி ஜெயிக்கிறார்...? என்பது தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான "தோனி" படத்தின் முக்காலும், முழுசுமான மீதிக்கதை!

நாய்படாத பாடுபடும் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்த்தனாக பிரகாஷ்ராஜ், வாங்கும் சம்பளம் போதாமல் வட்டிக்கு கடன் வாங்கி, பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து, அதை அடைக்க துணைக்கு மனைவியும் இல்லாமல், ஊறுகாய் தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி பெரும் போராட்டம் நடத்தும் பாத்திரத்தில் பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

படத்திற்கு தோனி நாட்-அவுட் என்று இந்திய கிரிக்கெட் கேப்டனின் பெயரை சூட்டிவிட்டு, கிரிக்கெட் மோகத்தில் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே என்ற வருத்தத்தில் மொட்டை மாடி கச்சேரியில் குடித்துவிட்டு நண்பர்களிடம் இந்த தோனி, தெண்டுல்கர் இவங்களையெல்லாம் தடை செய்து நாடு கடத்த வேண்டும்... என்று உணர்ச்சி பிழம்பாகி உளறும் இடத்தில் தொடங்கி, காய்கறிகாரனிடம் பெண்கள் மாதிரி பேரம் பேசுவது, ஊறுகாய் பாட்டில்களை ஆபிஸ் பீரோவில் பிறர் பார்வை படும்படி அடுக்கி வைத்து வியாபாரம் செய்ய முயல்வது, மகனின் படிப்பிற்காக ஆசிரியர்களிடம் கெஞ்சுவது, கிரிக்கெட் கோச் நாசரிடம் மகனை விட்டு விடும்படி மிஞ்சுவது, முறை தவறி வாழும் அப்பார்ட்மெண்ட் பெண்ணின் சூழ்நிலை புரியாமல் எக்கு தப்பாக பேசிவிட்டு, பின் அவரது மனிதாபிமானம் கண்டு மருகுவது, முதல்வரை பொது நிகழ்ச்சி ஒன்றில் தன் மகனுடன் முண்டியடித்து சந்திக்க முயல்வது... என நடுத்தர வர்க்கத்து பிரஜையாகவே வாழ்ந்திருக்கும் பிரகாஷ்ராஜூக்கு "தோனி" படத்தின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட இன்னும் பல உயரிய விருதுகள் கிடைக்கும் என்பது உத்திரவாதம்!

பிரகாஷ்ராஜூக்கு ஈடு கொடுத்து அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஆகாஷ், எனக்கு மேக்ஸ் வரலைப்பா, எனக்கு கிரிக்கெட் தான் வருது என்று தன் இயலாமையையும் கிரிக்கெட் சம்பந்தப்பட புள்ளி விவரங்களை சொல்லி தன் திறமையையும் வெளிப்படுத்தும் இடங்களில் பலே பலே... சொல்ல வைக்கிறார். இவர்களை மாதிரியே பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்டே, எனக்கு வேற வழி தெரியலை... அதான் இந்த தொழிலுக்கு வந்துட்டேன்... என்று ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பல இடங்களில் பிரகாஷ்ராஜையே மிஞ்சி விடுகிறார். ரிஜிஸ்தர் பிரம்மானந்தம், கிரிக்கெட் கோச் நாசர், கந்துவட்டிக்காரராக வரும் புதுமுகம், பிரகாஷ்ராஜின் பொறுப்பான மகளாக வரும் ஸ்ரீஜிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும் "தோனி" படத்தின் ஒவ்வொரு பலமான பேட்ஸ்மேன்கள் என்றால் மிகையல்ல!

இளையராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் கதையையும், களத்தையும் ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பது மாதிரி பரிச்சயப்படுத்தி பலம் சேர்த்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் இதே எண்ணத்தை படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஏற்படுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

பிரகாஷ்ராஜின் மகன் மாஸ்டர் ஆகாஷ், தோனியை ரோல் மாடலாக கொண்டு அவர் மாதிரி வரவேண்டும் என்று கிரிக்கெட் விளையாடுகிறான். ஆனால் ரோல் மாடல் வலது கை பேட்ஸ்மேன் என்றால், இவர் இடதுகை பேட்ஸ்மேனாக ஸ்கிரீனில் வருவது நெருடுகிறது! மற்றபடி ஷங்கரின் "நண்பன்" மாதிரி இல்லாமல், நம் நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என "நச்" ‌என்ற மாதிரி "டச்" பண்ணி, தமிழில் படம் இயக்கி இருக்கும் பிரகாஷ்ராஜூக்கு ரசிகன் ரசிகை பாகுபாடு இல்லாமல் இச்... இச்... தரலாம்!

மொத்தத்தில் "தோனி" மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை பெற்றவர்களுக்கும், பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களுக்கும் நல்ல "தோழன்(நீ!)"
--------------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்நம்முடைய கல்விமுறை குழந்தைகளுக்கு வரமா? சாபமா? என்ற கேள்வியை எழுப்பி, சாபம்தான் எனச் சொல்லி, கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் படம் "தோனி. கொஞ்சம் தவறியிருந்தாலும் பிரசாரப் படமாக ஆகியிருக்க வேண்டியது; ஆனால், கச்சிதமான திரைக்கதையாலும் இயல்பான கதை நகர்வாலும் ஒரு நல்ல படமாக வந்திருக்கிறது.

மனைவியை இழந்து, தன் இரண்டு குழந்தைகளோடு வாழும் ஒரு மிடில் கிளாஸ் மேன் பிரகாஷ்ராஜ். பத்திரப் பதிவு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கிறார். குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க முடியாவிட்டாலும், நல்ல கல்வியையாவது தரவேண்டும் என்று தன் சக்திக்கும் மீறி பெரிய ஸ்கூலில் படிக்க வைக்கிறார். இதனால் துண்டு விழும் பட்ஜெட்டை சமாளிக்க ஓவர் டைம் வேலை பார்க்கிறார். போதாதென்று ஊறுகாய் போட்டு விற்கிறார். அதுவும் போதாதென்று கந்து வட்டிக்கு பணம் வாங்கி மாதங்களைக் கடத்துகிறார்.

இரண்டு குழந்தைகளில் பெண் நன்றாக படிக்கிறாள்; பையனுக்கு ஆர்வமில்லை. ஆனால், கிரிக்கெட் என்றால் அவனுக்கு உயிர். கிரிக்கெட்தான் விளையாடுவேன் என அடம்பிடிக்கிறான் பையன். டென்ஷனாகி மகனை போட்டு அடிக்கிறார். தவறுதலாக பையன் மண்டையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு செல்கிறான். இது பிரகாஷ்ராஜின் வாழ்க்கையை திருப்பிப் போடுகிறது. தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ், மகனை கோமாவில் இருந்து மீட்டெடுக்க நடத்தும் போராட்டமும், அதன்மூலம் குழந்தைகள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் கல்விச் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதும் மீதிக் கதை.

தன் மூயட் மூவிஸ் தயாரிப்பில் பிரகாஷ்ராஜ் முதன்முதலாக திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் படம் பள்ளியில் பையன் வாங்கிய பதக்கங்களைப் பார்த்து உருகும் போதும்; ஆஸ்பத்திரியில், "அய்யோ பிள்ளையைப் புரிந்துகொள்ளாமல் இப்படி செய்துவிட்டேனே என்று குமுறி அழும் போதும்; "நீயா, நானா நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசும் போதும் நெகிழச் செய்கிறார், பிரகாஷ்ராஜ். கடன் வாங்க கூனிக் கறுகும் காட்சியிலும் மகனுக்காக பிரின்ஸிபாலிடம் கெஞ்சும் காட்சியிலும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.

மகனாக ஆகாஷூம், மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம். பயிற்சியாளராக நாசர், டாக்டராக தலைவாசல் விஜய், சப் ரிஜிஸ்டரராக பிரம்மானந்தம், சக குமாஸ்தாவாக சிங்கமுத்து... என எல்லோரும் இயல்பாக இபுருக்கிறார்கள். கந்துவட்டி கனிபாயாக முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார். பிரபுதேவா ஒரு பாடலுக்கு வருகிறார்.

மொட்டை மாடியில் காயப்போட்ட, ஜட்டி, காற்றில் பறந்து அதே பிளாட்டில் தனியாக குடியிருக்கும் ராதிகா அப்தேவின் துணிகளுடன் சென்றுவிட, அதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் பிரகாஷ்ராஜ் அல்லாடுவது படு யதார்த்தம். ராதிகா ஆப்தே அழகாக இருக்கிறார்; அதிகம் பேசாமலே ஸ்கோர் வாங்குகிறார்.

கல்வி முறைக்கு எதிராக கொதித்துப் பேசும் இடங்களிலும் மிடில் கிளாஸ் வேதனைகளைச் சொல்லும் காட்சிகளிலும் த.செ. ஞானவேலின் வசனம் படு ஷார்ப். பாடல்களை நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். இசை: இளையராஜா. வழக்கம்போல் பின்னணியில் ராஜாதான் என்பதை நிரூபித்திருக்கிறார், இசைஞானி.

மகேஷ் மஞ்ச்ரேக்கர் மராத்தி படத்தின் கதைதான் என்றாலும், கச்சிதமான திரைக்கதையால் ரீமேக் என்பதே தெரியாமல் செய்திருக்கிறார்கள். சில காட்சிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. ஆனால், சில இடங்களில் நாடகத்தனமாக இருப்பதையும் இடைவேளைக்குப் பிறகு அடிக்கடி நீயா நானா நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பது போலிருப்பதையும். தவிர்த்திருக்கலாம். ஆனாலும், தோனி, மேன் ஆப் தி மேட்ச்!

குமுதம் ரேட்டிங் - ஓகேவாசகர் கருத்து (37)

skavin - Drammen,நார்வே
15 மார், 2012 - 16:05 Report Abuse
 skavin Good film.
Rate this:
Senthilkumar - Dubai,,இந்தியா
14 மார், 2012 - 10:06 Report Abuse
 Senthilkumar அருமையான படம்.
Rate this:
Prabhu Ram - hyderabad,இந்தியா
27 பிப், 2012 - 08:59 Report Abuse
Prabhu Ram who is the stupid critic who doesn't understands the difference between replica and role model?
Rate this:
RAJ - chennai,இந்தியா
23 பிப், 2012 - 15:33 Report Abuse
 RAJ SUPPER FILM DHONI PLS SEE ALL PEOPLE 75/100 MARK
Rate this:
ரமேஷ் - tirpur,இந்தியா
23 பிப், 2012 - 11:53 Report Abuse
 ரமேஷ் அருமையான படம்
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தோனி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in