சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
'தி கோட்', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தற்போது இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனாட்சி சவுத்ரி கலந்து கொண்டார். அப்போது அவரிடத்தில் உங்களுக்குப் பிடித்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அணி எது என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த அவர், “குறிப்பிட்டு இந்த அணியைத்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை. ஆனால் தோனி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும். தோனியைப் பிடிக்க ஆரம்பித்ததால் தான் நான் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்கினேன்” என்று கூறியிருக்கிறார்.