Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சிவா மனசுல சக்தி

சிவா மனசுல சக்தி,
22 பிப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிவா மனசுல சக்தி

தினமலர் விமர்சனம்


கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில், பிரயாணிக்கும் தன்னிடம், வலிய வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிவாவிடம் தான் விமான பணிப்பெண் என்று பந்தாவாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார் சக்தி. சிவாவும் தன்னை ராணுவ வீரனாக கருதும் சக்தியிடம் தான் அதே வீரன்தான் என அலட்டிக் கொள்கிறார். ஆனால் நிஜத்தில் சக்தி ஒரு எப்.எம். ரேடியோ அறிவிப்பாளர். சிவாவோ கூரியர் பாய்!

ஒருவருக்கொருவர் நிஜம் தெரிந்ததும், இந்த தில்லுமுல்லு ஜோடி அடிக்கும் டீசிங் லூட்டிதான் சிவா மனசுல சக்தி படத்தின் மொத்த கதையும்!

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. ஆனால் அந்த காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து, சிவா ஈவ்டீசிங்கிலும், சக்தி ஆதாம் டீசிங்கிலும் ஈடுபட... அட, என்னப்பா இவங்க... என..? சற்றே போரடித்தாலும் இருவரும் இறுதியில் இணைவார்களா? மாட்டார்களா? எனும் எதிர்பார்ப்பை யு தூண்டி விட்டு ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.எம்!

அதற்காக ஹீரோயின் சக்தி பணிபுரியும் எப்.எம். ரேடியோ அலுவலகத்திற்கே போய், அரை நிர்வாணமாக சிவா அடிதடி கலாட்டாவில் ஈடுபடுவதும், சக்தி தான் சிவாவின் காதலி என்றால்... அவரது சக ஆண் ஊழியரும் சிவாவின் அடிஉதைகளை வாங்கிக் கொண்டு தோமே என்று சிவாவின் ஆண் காதலர் மாதிரி இருப்பதெல்லாம் சுத்த போர்.  அதே மாதிரி என்னதான் டீஸிங்... அதுவும் லவ் டீஸிங் என்றாலம் காரணமே இல்லாமல் ஹீரோ சிவா, கல்யாணத்திற்கு முன் முதல் இரவு கேட்பதும், அது ஏதோ கேட்டவுடன் எடுத்துக் கொடுக்கும் கடை சரக்கு மாதிரி மறுப்பேதும் சொல்லாமல் ஹீரோயின் சக்தி உடனடி சம்மதம் சொல்லி சல்லாபம் கொல்வதும் ஓவரோ ஓவர்! விகடன் டாக்கீஸின் முதல் படமே இப்படியா?

மேற்கண்ட மேரேஜூக்கு முன் பர்ஸ்ட் நைட் கேட்கும், நடத்தும் சீன் மட்டுமல்ல... சக்தியை பழிவாங்க அவருக்கு கூரியரில் மதுபாட்டில்கள் வந்ததாக சக்தியின் அப்பாவிடம் சிவா கொடுப்பது, ரேடியோ அலுவலக இன்டீசண்ட் பிஹேவியர் உள்ளிட்ட இன்னும் பல சீன்கள் சிவா மனசுல சக்தியா, சகதியா? என கேட்கத் தூண்டுகின்றன. என்னதான் இளைஞர்கள் விரும்புவார்கள் என்றாலும் அதற்காக இப்படியா?

சிவாவாக ஜீவா சென்னை இளவட்டங்கள் மாதிரியே செமையாய் கலாய்க்கிறார். சில இடங்களில் இவரது கலாய்ப்பு லூசுத்தனமாக இருப்பதை இயக்குனர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம். மற்றபடி கேலி, கிண்டல் என ஒரு புதுமாதிரி ஜீவாவை இந்த படத்தில் பார்க்க முடிந்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

சக்தியாக புதுமுகம் அனுயா... சில காட்சிகளில் அனுயா அழகுய்யா...! சில காட்சிகளில் ஆண்ட்டிய்யா என சொல்லத் தோன்றுகிறது. அம்மணி உடனடி உணவுக் கட்டுப்பாட்டிற்கும், உடற்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தால் தமிழ் சினிமாவில் ஒரு வல்லிய ரவுண்டு வரலாம்.

காமெடிக்கு சந்தானம், சத்யன். சந்தானம் வழக்கம்போல காம நெடி...! சத்யன் கடி! ஊர்வசி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஷகீலா, ஜீவாவின் தங்கையாக வரும் புதுமுகம் சிநேகா, மகாநதி சங்கர் என அரை டஜன் நட்சத்திரங்கள் சிரிக்க வைக்க முயற்சித்து பாதி வெற்றி, பாதி தோல்வி கண்டுளளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும் சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்! எடிட்டர் எஸ்.பி.அகமதுவின் கத்தரி இன்னும் சற்றே கூர்மையாக இருந்திருக்கலாம். என்னதான் கலாய்ப்பு என்றாலும் படம் முழுக்க சிகரெட், தண்ணி, அடிதடி என திரியும் சிவா மீது சக்திக்கு அப்படி என்னதான் காதலோ? எனும் கேள்வி எழாமல் இருந்திருந்தால் சிவா மனசுல சக்தி படம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்திருக்கும். இப்போதைக்கு இந்தக்கால நவீன இளைஞர்கள் மனதில் மட்டும் சிவாவும் சக்தியும்!

சிவா மனசுல சக்தி : இந்தக்கால இளைஞர்களின் புத்தி?


------------------------
குமுதம் விமர்சனம்


""ஃபீலிங்கா இருக்கு மச்சி.... ஒரு ஃபிகரும் செட்டாகலை. உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தா இண்ட்ரோ கோடேன்'' இது சிவா.

"சிகரெட், தண்ணி இல்லாத பையனா வேணும் அவனை சுத்தல்ல விட்டாலும் என்னைச் சுத்தியே வரணும்'  இது சக்தி

யார் மனசுல யார் என காதல் தத்துவம் பேசாமல் இயல்பான குணங்களோடு கோபத்தில் கொட்டித் தீர்ப்பதும், கட்டிக் கொள்வதுமாய் கலகலப்பாக நகர்கிற காதல் கதை "விகடன்' பா.சீனிவாசனின் முதல் தயாரிப்பு.

நெஞ்சு தெரிய சட்டை பட்டனை கழற்றிவிட்டு கூலாக காதலியின் முன்னால் சிகரெட் பிடிப்பது. ஃப்ரெண்ட்ஸ் ஆயிருவோமா.... என அனுபாவிடம் வம்பு செய்து வழிவது என அக்மார்க் காதலர்களாக அழகாக ஞாபகத்தில் நிற்கிறார் ஜீவா. காதலியின் வீட்டுக்கு வோட்கா பாட்டிலை பார்சல் அனுப்புவது ஜில்லென்று "'தில்'. உருட்டி வைத்த வெண்ணெய் மாதிரி அனுயா. ரேடியோ ஜாக்கி கேரக்டருக்கு நல்ல பொருத்தம். அனுபாவை கெஞ்சிக் கெஞ்சியே பிராக்கெட் போட்டு தியேட்டருக்கு ஜீவா அழைத்துப் போவதும், ஜீவாவை டீலில் விட்டுவிட்டு வேறொருவனுடன் அனுயா அலம்பல் செய்வதுமாக யூத்ஃபுல் காட்சிகள். இயக்குநர் ராஜேஷின் முதல்படமா என வியக்க வைக்கிறது!

காலிப்பையனின் ஜாலி அம்மாவாக ஊர்வசி. ரேடியோவுக்கு போன் போட்டு "நான் வொய்ஃப் ஹவுஸ்...' என படபடப்பதும், பூசணிக்காய் வறுவல் என டிப்ஸ் கொடுப்பதுமாக செம ரகளை செய்கிறார். ஊர்வசியின் நடிப்பு ஆரோக்கியமான இதயத் துடிப்பு.

அடங்காப்பிடாரி, இளசுகளின் "ஐபாட்டில் ஒலிக்கும். பிடிக்கவில்லை என முடிவு செய்தபிறகு ஜீவா மீது அனுபாவுக்கு மறுபடியும் காதல் திரும்புவதில்தான் லாஜிக் மிஸ்ஸிங். ஆர்யாவின் வருகை தேவையில்லாத இடைச்செருகல் கொஞ்சம் சறுக்கல். லொள்ளு சந்தானம் காமெடி மணக்கும் சந்தனம். குஞானசம்பந்தம் ஒட்டாமல் பேசும் வசனம் மந்தம். சிவா மனசுல சக்தி நம்ம மனசுலயும் இடம் பிடிக்கிறார்.

குமுதம் ரேட்டிங் : ஓ.கே.       



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சிவா மனசுல சக்தி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in