விமர்சனம்
காவல்துறை அதிகாரி மகள் கீர்த்தி சாவ்லா சுற்றுலா செல்கிறார். அங்கு கைடு ஆக வரும் அஸ்வின் சேகரின் கனிவான குணம், கசிந்துருகும் மணம் கீர்த்தியை கவருகிறது. அஸ்வின் மீது கீர்த்தி ஒருதலைகாதலில் விழுகிறார். காதலை அஸ்வினிடம் சொல்வதற்கு முன் அஸ்வின் எஸ் ஆகிறார். மீண்டும் ஒரு கொலை கைதியாக அஸ்வினை சிறையில் பார்க்கிறார் கீர்த்தி சாவ்லா! ஏன்? எதற்கு.? எப்படி..? இருவரும் க்ளைமாக்ஸில் ஜோடி சேர்ந்தனரா? இல்லையா.? என்பது சஸ்பென்ஸான மீதிக்கதை!
அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா, எஸ்.வி.சேகர் எல்லோரும் நடித்திருப்பது பலம். நாடகத்தன்மையில் நடித்திருப்பது பலவீனம்! சோனா ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது ஆறுதல்! சோனாவின் ஆட்டம் மாதிரியே டி.இமானின் இசையும் பெரும்பலம்!
இயக்குநர் அகஸ்திய பாரதி இறைவனடி சேர்ந்துவிட்டதால் அவரது இயக்கம், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது.
ஆகமொத்தத்தில், நினைவில் நின்றவள் வெளியீட்டில் எஸ்.வி.சேகர், இப்படத்தின் இயக்குநர் குடும்பத்திற்கு செய்த உதவி மட்டுமே நினைவில் நிற்கிறது!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!