தினமலர் விமர்சனம் » இஷ்டம்
தினமலர் விமர்சனம்
இதுநாள்வரை கிராமத்து நாயகராகவே வலம் வந்த "களவாணி" விமல், சிட்டி சப்ஜெக்ட்டில் ஐ.டி. இளைஞராக வாகை சூடியிருக்கும் படம் தான் "இஷ்டம்"!
கதைப்படி விமலும், சந்தானமும் ஐ.டி. கம்பெனி உத்யோகத்திலும், ஒரே அறையிலும் இருக்கும் அல்ட்ரா மார்டன் இளைஞர்கள் (இருவரும் ஒருநாள் கூட ஐ.டி., கம்பெனிக்கு போன மாதிரியே தெரியலையேப்பா...) சந்தானம் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி, இப்படி! ஆனால் விமலோ கட்டிய காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு, விவாகரத்து... என்று இருந்தாலும் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணாத புண்ணியவான்! அப்படிப்பட்ட புண்ணியவானை சின்ன ஈகோ மோதலால் பிரிந்த காதல் மனைவி நிஷா அகர்வாலு(காஜல் அகர்வாலின் உடன்பிறப்பு)ம், விமலும் மறுமணம் செய்து கொள்ள ரிஜிஸ்தர் ஆபிஸ் சென்ற பின் மனம் மாறி மீண்டும் ஒன்றிணைவதே இஷ்டம் படத்தின் மொத்த கதையும்!
விமல் ஐ.டி., வாலிபராக "லுக்"கிற்கு ஓ.கே.! ஆனால் அவர் பேசும் இங்கிலீஷூம், அவரது அறை நண்பர் சந்தானம் அடிக்கும் லூட்டிகளும் செம காமெடி! கதாநாயகி நிஷா அகர்வால் டபுள் ஓ.கே., எஸ்.தமனின் இசை படத்தின் பெரிய பலங்களில் ஒன்று!
புதியவர் பிரேம் நிஸாரின் எழுத்து-இயக்கத்தில் "இஷ்டம்" - விமலின் ஐ.டி. ஆங்கிலம் மாதிரி ஒரு சில குறைகளால் கொஞ்சம் "கஷ்டம்"!