Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கழுகு

கழுகு,Kazhugu
25 மார், 2012 - 09:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கழுகு

 

தினமலர் விமர்சனம்கொடைக்கானல் தற்கொலைப்பாறை, பள்ளத்தாக்கு பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் காதல் ஜோடிகள், கடன்காரர்கள் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... பிரச்னைக்கு உள்ளானவர்களின் பிணங்களை கீழேயிருந்து தூக்கி வந்து உரியவர்களிடம் உறவினர்களிடம் ஒப்படைத்து கஷ்ட ஜீவனம் நடத்தும் கதாபாத்திரம் ஹீரோ கிருஷ்ணாவினுடையது! டீ-த்தூள் பேக்டரியில் கூலி வேலைக்குப்போகும் கேரக்டர் ஹீரோயின் பிந்து மாதவினுடையது! இந்த இருவருக்குமிடையே எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் காதல், வில்லன்களாலும், விதிவசத்தாலும் தோல்வியைத் தழுவ, சாவிலாவது ஒன்றாவோம்... என கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடியும் தற்கொலை பள்ளத்தாக்கில் சமாதியாவதுதான் "கழுகு" படத்தின் மொத்தக்கதையும்!

ஹீரோ கிருஷ்ணாவின் நடிப்பில் முந்தைய படங்களைக்காட்டிலும் நல்ல முன்னேற்றம்! நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்டவர்களுடன் தற்கொலைப் பள்ளத்தாக்கில் உயிரை விடும் பிணங்களைத் தூக்கி வரும் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். பிந்து மாதவியுடனான காதல் காட்சிகளிலும் நண்பர்களை நயவஞ்சகமாக கொன்ற வில்லன் ஜெயப்பிரகாஷ் அண்ட் கோவினருடன் மோதும் ஆக்ஷ்ன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கிருஷ்ணா! கீப் கிட் அப் கிருஷ்ணா.

பிந்து மாதவி டீ - பேக்டரி தொழிலாளியாக டல் மேக்-அப்பிலும் டாலடிக்கிறார். பலே பலே! பிந்து மாதவியின் கவர்ச்சிகரமான கண்கள் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவதும் கழுகு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும். தன் காதல் தோல்வி அக்காவின் பிணத்தை தூக்கி வரும் கிருஷ்ணாவுடன் இருவருக்கு ஏற்படும் காதலும் காட்சிகளும் அழகாக உயிரோட்டமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது தோழியாக வரும் சுஜிபாலாவும் நச் என்றே தேர்வு!

சுஜிபாலாவின் கணவராகவும், கிருஷ்ணாவின் நண்பராகவும் வரும் கருணாஸ், தம்பி ராமையா, கிருஷ்ணா அண்ட் கோவினரின் காமெடிகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சொல்லும் தத்துவ விநாடிகள்! ஆனால் அடிக்கடி அவர்கள் பிணங்களை பீஸ், பீஸ் என்பது வெறுப்பேற்றுகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்...!" தத்துவப்பாடலும் கழுகு படத்திற்கு பெரும் பலம்! சத்ய சிவாவின் இயக்கத்தில் வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கழுகு, ஒருசில காட்சிகளில் தாழப்பறந்தாலும், ஒரு சில காட்சிகளில் உயர உயர பறந்து கழுகு எனம் பெயரை அழகாக காப்பாற்றியிருக்கிறது!

ஆக மொத்தத்தில் "கழுகு" தமிழ் ரசிகர்களின் மனதை கரைக்கும் "மெழுகு!"

--------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்


கொடைக்கானலில் வசிக்கும் சேராவுக்கு மலையுச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தவர்களின் உடல்களை எடுத்து வருவதுதான் தொழில். “பிணத்தை எடுத்தோமா, பணத்தை வாங்கினோமா’ என்பதைத் தவிர எந்தக் கவலையும் இல்லாமல் வாழும் சேராவை எதிர்பாராத ஒரு காதல் துரத்தி, தொட்டு விளையாடி, சிரிக்க வைத்து, கடைசியில் கதறியழ வைப்பதுதான் “கழுகு’.

“அலிபாபா’வில் அறிமுகமான கிருஷ்ணாதான் சேரா. பொறுப்பின்றி திரியும் இளைஞன் கேரக்டரில் உறுத்தல் இன்றி பொருந்துகிறார். அபாயகரமான மலைச்சரிவுகளிலும் புதர்க் காடுகளிலும் இறங்கி பிணத்தை எடுக்கும் காட்சிகளுக்காக ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். ஐ.டி. யூத்களை நினைவுப்படுத்தும் கிருஷ்ணாவின் குரல்தான் மைனஸ். கிருஷ்ணாவுக்குக் காட்டில்தான் வேலை என்றாலும், காட்டை விட்டு வெளியே வராதவர் போலவே எப்போதும் காட்டப்படுவது ஏனோ?

ஆந்திராவிலிருந்து வந்துள்ள பிந்து மாதவி பெருங்கூட்டத்தில் கவனம் ஈர்க்கும் ஒரே ஒருத்தியாக மிளிர்கிறார். இறந்துபோன தனது தங்கையின் மோதிரத்தை சேராவிடம் கெஞ்சிக்கேட்கும் காட்சியில் போகிற போக்கில் மனதைக் கனக்க வைத்துவிடுகிறார்.

கிருஷ்ணாவின் தொழில் கூட்டாளிகளாக கருணாஸும் தம்பி ராமையாவும். காமெடி வட்டத்தைத் தாண்டி, குணச்சித்திர நடிகர்களாகவும் தடம் பதிக்கும் வேலையை இதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். விருந்துக்கு வந்த கிருஷ்ணாவுக்கு கருணாஸ் ரகசியமாக சரக்கு ஊற்றிக் கொடுக்கும் விதம் ஒரு யதார்த்த சிறுகதையின் நச்சென்று வரியாக பளிச்சிடுகிறது. பிணம் தூக்கும் சூழலில்கூட இந்தக் கூட்டணி செய்யும் அமளிதுமளி பல இடங்களில் ஓவர்டோஸ் ஆகி, அஸ்திவாரத்துக்கே வேட்டும் வைக்கிறது.

அடுத்தவன் பாக்டரி தேயிலையை ஆள் வைத்துக் கடத்தும் ஜெயப்பிரகாஷின் வில்லன் ட்ராக் கதையோடு ஒட்டவே இல்லை. ஜெயப்பிரகாஷால் கிருஷ்ணாவுக்கு ஏற்படும் பேரிழப்புகள் நம் கண்களை நனைய வைத்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அது ஏனோ நடக்கவில்லை.

காதல் அடிக்கோடாக ஓடும் காட்சிகளிலெல்லாம் எழும் சோம்பலான ஹார்மோனிய இசையில் மட்டும் யுவன் சங்கர் ராஜா தெரிகிறார். சத்யாவின் கேமரா மலைப்பிரதேசத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை அழகான பக்கங்களாக நம் முன்னால் விரித்துப்போடுகிறது.

மாறுபட்ட கதைக்களம், அங்கங்கே தெறிக்கும் குறும்பான வசனம் போன்றவற்றைப் பார்க்கும்போது அறிமுக இயக்குனர் சத்யசிவா அடுத்த ஆட்டத்தில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

கழுகு - இன்னும் உயரத்தில் பறந்திருக்கலாம்.

குமுதம் ரேட்டிங் - ஓகேவாசகர் கருத்து (40)

RAJESH - saudi,இந்தியா
05 மே, 2012 - 15:25 Report Abuse
 RAJESH சூப்பர் சூப்பர் சூப்பர் ...............
Rate this:
ulaganathan - luxmaldives resorts,மாலத்தீவு
23 ஏப், 2012 - 19:38 Report Abuse
 ulaganathan வெரி குட் movie
Rate this:
sasirekha - aruppukottai,இந்தியா
21 ஏப், 2012 - 21:20 Report Abuse
 sasirekha பிந்து மாதவி சூப்பர், நடிப்பும் சூப்பர். குட் movie
Rate this:
GOPI - THANJAVUR,இந்தியா
19 ஏப், 2012 - 13:23 Report Abuse
 GOPI NICE SONG, YUVAN SUPER,HEROIN BEAUTIFULL
Rate this:
இசக்கிவேல் - dingigul,இந்தியா
14 ஏப், 2012 - 11:24 Report Abuse
 இசக்கிவேல் பிலிம் இஸ் வெரி குட் நியூ லவர் பரக்கவேண்டேய படம்
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

கழுகு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in