Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கிருஷ்ணவேணி பஞ்சாலை

கிருஷ்ணவேணி பஞ்சாலை,Krishnaveni Panjaalai
  • கிருஷ்ணவேணி பஞ்சாலை
  • ஹேமச்சந்திரன்
  • நந்தனா
  • இயக்குனர்: தனபால் பத்மநாபன்
15 ஜூன், 2012 - 16:09 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கிருஷ்ணவேணி பஞ்சாலை

தினமலர் விமர்சனம்


காதல்ல ஜெயிக்கத் துடிக்கிற இளசுகள், சாதி வெறியால அதை தடுக்கத் துடிக்கிற பெருசுகள், போனஸ் கேட்டு போராடுற தொழிலாளிகள், அதைக் கொடுக்க முடியாம தவிர்க்கிற முதலாளி... இதையெல்லாம் ஒரு பஞ்சாலையை மையமா வைச்சு படமாக்க... முயற்சி மட்டுமே பண்ணியிருக்கார் இயக்குநர்.

அப்பாவுக்கு அப்புறம் கிருஷ்ணவேணி பஞ்சாலையை நிர்வாகம் பண்ற சின்ன முதலாளி (ராஜீவ் கிருஷ்ணா), தாராள மனசோட ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்க... ஊழியர்கள் சந்தோஷமா வேலை பார்க்கறாங்க. பஞ்சாலையில் பல சாதிக்காரங்களும் ஒண்ணா வேலை பாக்கறதால, சாதி விட்டு சாதி காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கற பழக்கம் ஊருக்குள்ள அதிகமாகுது. அநத வரிசையில் கதிரும் (ஹேமச்சந்திரன்), பூங்கோதையும் (நந்தனா) படத்தோட ஆரம்பத்துல இருந்தே பயங்கரமா காதலிக்கிறாங்க. அவங்க மட்டுமில்லாம... பூங்கோதையோட அக்கா மீனாட்சியும், முத்துங்கற வேற சாதிக்கார பையனை காதலிக்கிறாங்க. “சாதி சனத்துக்கு முன்னாடி கவுரவத்தோட வாழணும்’னு நினைக்கிற தன்னோட அம்மா (ரேணுகா) கண்டிப்பா காதலை ஒத்துக்க மாட்டாங்கன்னு வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறாங்க மீனாட்சி. இதனால் கடுப்பாகுற அவங்க அம்மா, மகளை விருந்துக்கு கூப்பிட்டு, யாருக்கும் தெரியாம விஷம் வெச்சு கொன்னுடுறாங்க. “மீனாட்சியோட சாவுக்கு முத்துதான் காரணம்’னு கோபப்படுற சாதிக்காரங்க, முத்துவோட கதையை முடிச்சிடுறாங்க.

இந்த நேரத்துல... “மில் நஷ்டத்துல ஓடுறதால தாராளமா போனஸ் கொடுக்க முடியாது!’ன்னு முதலாளி சொல்ல, எங்களுக்கு “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’னு தொழிலாளிகள் கொந்தளிக்க... ஸ்டிரைக்! நஷ்டத்துல பஞ்சாலையே மூழ்கிப் போகுது. இதுக்கு நடுவுல, பூங்கோதையோட வேலை பார்த்த சண்முகம் வந்து பூங்கோதையை பொண்ணு கேட்கறாரு. சிலபல காரணங்களால அந்த சம்பந்தம் முடியாம போக... பூங்கோதை வீட்டு வாசல்லயே விஷம் குடிச்சிடுறாரு சண்முகம். அவமானம் தாங்காம இந்த முறை தானே விஷத்தை சாப்பிட்டு செத்து போயிடுறாங்க பூங்காதையோட அம்மா. அதுக்கப்புறம் பூங்கோதையும் கதிரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு பிழைப்பைத் தேடி சென்னைக்கு வந்து வாழ்றாங்க. 14 வருஷத்துக்கு அப்புறம் பஞ்சாலையில வேலை பார்த்த எல்லோரையும் கூப்பிட்டு பாக்கியை செட்டில் பண்ணி “நல்லா இருங்க’ன்னு வாழ்த்துறாரு முதலாளி. அவ்ளோதான்.... படம் முடிஞ்சிருச்சு!

கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கற கதாநாயகி நந்தனாவையும், ஒருசில பாடல்களையும் தவிர படத்துல வேற எதுவுமே ரசிக்கும் படியா இல்லை... அதுக்கு முக்கியமான காரணம்... படம் எந்த திசையை நோக்கி பயணிக்குதுன்னு கடைசி வரைக்கும் புரிஞ்சுக்க விடாம தடுக்கற திரைக்கதை.

மொத்தத்தில் கிருஷ்ணவேணி பஞ்சாலை - நனைஞ்சு போன பஞ்சு



வாசகர் கருத்து (10)

கலீஸ் - tirupur,இந்தியா
28 ஜூலை, 2012 - 13:47 Report Abuse
 கலீஸ் நாட் குட் நாட் bad
Rate this:
anand - Coimbatore,இந்தியா
26 ஜூன், 2012 - 23:29 Report Abuse
 anand தினமலர் கருத்தை வழி மொழிகிறேன். ஏனெனில் இது வழக்கமான தமிழ் படம் போல் இல்லாமல் (hero build up, villain build up, hero-villain meet up, half an hour climax and more, expected screen plays all are missing) புதுசா இருக்குங்க.
Rate this:
பிரபு - London,யுனைடெட் கிங்டம்
21 ஜூன், 2012 - 02:28 Report Abuse
 பிரபு நான் இன்னும் இந்த படம் பார்கவில்லை. இந்த விமர்சனத்தை ஏற்க மனசு இல்லை. கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாக இருக்கவேண்டும்.
Rate this:
காளிமுத்து சு - Virudhunagar, Maruluthu,இந்தியா
20 ஜூன், 2012 - 14:54 Report Abuse
 காளிமுத்து சு panchaalai for nenchalai பஞ்சாலை என்ற நெஞ்சாலை
Rate this:
பிரபு - virudhunagar thammanaickenpatti,இந்தியா
20 ஜூன், 2012 - 14:48 Report Abuse
 பிரபு அய்யா நான் இன்னும் படம் பார்கவில்லை பார்த்துவிட்டு அப்புறம் சொல்றேன்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in