Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்,deivathirumagal
19 ஜூலை, 2011 - 14:41 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தெய்வத்திருமகள்

 

தினமலர் விமர்சனம்விக்ரமிற்கும், டைரக்டர் விஜய்க்கும் விருதுகளை குவிக்க இருக்கும் திரைப்படம் தான் "தெய்வத்திருமகள்".

ஐந்தாறு வயது குழந்தையின் மனநிலை கொண்ட கிருஷ்ணாவின் குழந்தை நிலா. நிலா மீது உயிரையே வைத்திருக்கிறார் கிருஷ்ணா. நிலா பிறந்ததும் அவரது அம்மா இறந்து போக, சுற்றம் மற்றும் நட்பின் உதவியுடன் குழந்தையை வளர்க்கும் கிருஷ்ணாவிற்கு, நிலா ஸ்கூல் போக ஆரம்பித்ததும் பிரச்சனையும் ஆரம்பமாகிறது. அதாகப்பட்டது, ஸ்கூல் கரஸ்பாண்டட் அமலாபாலின் அக்கா மகள் தான் நிலா. மனவளர்ச்சி இல்லாத கிருஷ்ணாவை காபந்து செய்கிறேன் பேர்வழி என, அவரை கதாலித்து, கணவராக மணந்து கொண்டதால் தான், தன் அக்கா அகால மரணமடைந்ததாக கருதும் அமலா, தன் கோடீஸ்வர அப்பாவிடம் சொல்லி குழந்தை நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார்.

பிரிந்த நிலாவை கிருஷ்ணாவிடம் சேர்க்கிறேன் என சொல்லி வக்கீல் அனுஷ்கா, கிருஷ்ணாவிற்காக வாதடுகிறார். அமலாபாலின் அப்பாவும், அவரது பணமும் அனுஷ்காவின் வாத திறமைக்கு முன் வென்றதா, தோற்றதா...? கிருஷ்ணாவிற்கு நிலா கிடைத்தாரா...? இல்லையா என்பது தான் மீதிக் கதை! இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய்! "கிரீடம்", "பொய் சொல்ல போறோம்", "மதராசபட்டினம்" ஆகி‌ய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் "தெய்வத்திருமகளை" தந்திருப்பதற்காகவே அவரை பாராட்டலாம்!

கிருஷ்ணாவாக சீயான் விக்ரம், ஐந்தாறு வயது குழந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். விருதுகள் நிச்சயம்! விக்ரம் மாதிரியே அவரது பெண் குழந்தை நிலாவாக வாழ்ந்திருக்கும் பே‌பி சாராவும் பிரமாதம். அவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான அத்தனை விருதுகளும் உறுதி!

அனுஷ்கா, அமலாபால் இருவரும் கதாநாயகிகளாக இல்லாமல் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருப்பது, "தெய்வத்திருமகள்" படத்தின் பலம்! அனுஷ்காவின் இமாஜினேஷனில், விக்ரமுடன் அவர் பாடும் டூயட் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் படத்தின் பலவீனம்! நாசர், சந்தானம், ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், "பிளாக்" பாண்டி, சச்சின், பிரியா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

நா.முத்துக்குமாரின் பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு, நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட இயக்குநர் விஜய்க்கும், விக்ரமுக்கும் கூடவே குழந்தை நட்சத்திரம் பேபி சாராவுக்கும் விருதுகள் பல பெற்று தரப்போவது உறுதி!

"தெய்வத்திருமகள்" - விருதுகள் "பெரும் மகள்!"வாசகர் கருத்து (315)

எ.MATHIYALAGAN - chennai,இந்தியா
18 மார், 2012 - 11:44 Report Abuse
 எ.MATHIYALAGAN supear movie
Rate this:
அன்பு - kanchipuram,இந்தியா
04 அக், 2011 - 12:48 Report Abuse
 அன்பு அருமையான படம் . சின்ன சின்ன உணர்சிகள் தான் வாழ்கை. ரசிக்க தவராதீர்கள். இந்த படம் பார்பவர்கள் மனதை கண்டிப்பாக நெருடும். படத்தை உருவாக்கிய மற்றும் உதவி புரிந்த அனைவர்க்கும் பாராட்டுகள் மற்றும் மன்மார்ந்த நன்றிகள். இன்னும் பல படங்களை எதிர்பார்க்கும் பண்பான தமிழன் . நன்றி ......
Rate this:
ssk - chennai,இந்தியா
30 செப், 2011 - 09:14 Report Abuse
 ssk உண்மைலேயே சூப்பர் பிலிம் . இதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. விக்ரம் ஆக்டிங்....... எல்லாருக்கும் பிடித்த மாதிரி கதை கொடுத்த விஜய்க்கு மிக்க நன்றி .சொல்லுறவுங்க சொல்லிட்டே தான் இருப்பாங்க அதை நீங்க காதுலையே போட்டுக்கதிங்க .இந்த மாதிரி நல்ல படம் நீங்க நிறைய எங்களுக்கு கொடுக்கணும் பிளிஸ் .சாரா நடிப்பு ரியலாவே இருந்தது .
Rate this:
ஜெயஸ்ரீ - Chennai,இந்தியா
21 செப், 2011 - 14:36 Report Abuse
 ஜெயஸ்ரீ very very nice movie..vikram sir acting super...and baby sara also acting very good.......
Rate this:
kabilan - kovilpatti,இந்தியா
18 செப், 2011 - 11:21 Report Abuse
 kabilan கிளைமாக்ஸில் நான் அழுதுட்டேன் நெஞ்சை தொடும் படம் all the best deivathirmagal team
Rate this:
மேலும் 310 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தெய்வத்திருமகள் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in