Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சால்ட்

சால்ட்,
  • சால்ட்
  • ..
  • ஏஞ்சலினா ஜோலி
  • இயக்குனர்: பிலிப் நாய்ஸ்
04 ஆக, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சால்ட்

சால்ட்

உலகில் மிகவும் அழகான (செக்ஸியான) பெண்கள் லிஸ்டில் பல ஆண்டுகள் முதல் இடத்தையும் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் தனக்கென்று நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா  ஜோலி இன்றைய நிலையில், ஹாலிவுட் நடிகைகளில் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெறுபவரும் இவர்தான். பலபடங்களில் இவரது அழகை பார்த்திருக்கலாம். ஆனால் இவரது லேட்டஸ்ட் படமான சால்ட் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஜோலியை ரசிக்க முடிகிறது.

மயிர்க் கூச்சலெடுக்கும் ஆக்ஷன் சண்டை காட்சிகள் விறுவிறுப்பான கதை அமைப்பு, இவை ஜேம்ஸ் பாண்ட் படத்தின் டிரேட் மார்க்குகள். சால்ட் படத்தில் ஏஞ்ஜலினா ஜோலி, அவற்றை விட நிறைய சாதித்திருக்கிறார்.

எவ்லின் ஸால்ட், ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட். அமெரிக்க அரசின் ரகசிய உளவாளி. வடகொரியாவில் ஒரு சிறைச்சாலையில் அவள் துன்புறுத்தப்படுவது தான் படத்தின் ஆரம்ப காட்சி. அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு அமெரிக்கா திரும்புகிறார். அமெரிக்காவில் தஞ்சம் அடையும் ஒரு ரஷிய உளவாளி, விசாரணையின் போது, சால்ட் ரஷியாவிற்கு உளவு பார்க்கிறவர் என்று சொல்கிறார். அதைகேட்ட ஸால்ட் அதிர்ச்சி அடைகிறாள். ரஷிய உளவாளி சொல்லுவதை நம்புகிற அமெரிக்க உளவு நிறுவனம், ஸால்ட்டை சந்தேகிக்கிறது. தன் நேர்மையை நிரூபிக்க ஸால்ட் தப்பித்து ஓடுகிறாள்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அரசு இயந்திரம் முழுவதும் எல்லா விதத்திலும் அவருக்கு துணையாக நிற்கும். உதவிகள் செய்யும். ஆனால் சால்ட் அரசு நிறுவனத்தினரிடம் சரி, எதிரிகளிடமும் சரி, அகப்பட்டுக் கொள்ளாமல், சாதிக்க வேண்டியிருக்கிறது. இறுதியில் மிகப்பெரிய அணு அழிவை நடக்கவிடாமல் தடுத்து தன் நேர்மையை ஸால்ட் நிரூபிக்கிறார்.

ஏஞ்ஜலினா ஜோலி, திரைப்பட கேரியரில் சால்ட் ஒரு சாதனைப் படம் என்றே சொல்லலாம். தனி ஆளாக நின்று, ஜோலி, மயிர்க்கூச்சலெடுக்கும் ஸ்டண்ட்கள் செய்கிறார். அதிகாரிகளால் துரத்தப்படும்போது, ஓடும் டாக்ஸியில் இருந்து குதிக்கிறார். மேம்பாலத்தில் செல்லும் போது ஓடும் லாரியில் குதித்து தப்பிக்கிறார்.
 
டிராபிக் அதிகமான முக்கிய சாலையில், வரும் நபரை தாக்கி, அவரது மோட்டார் பைக்கில் ஜோலி தப்பிக்கிறார். பைக், கார் சேஸிங், பைக்கில் சாலையில் பறப்பது நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருமுறை நீண்ட போராட்டத்திற்கு பின், அவர் தப்பிக்கும்போது, ரசிகர்கள் பாராட்டி, கை தட்டுகிறார்கள். கார் சேஸிங் த்ரில்லிங்காக படமாக்கப்பட்டிருக்கிறது. துணை ஜனாதிபதியின் இறுதி சடங்கில் பலத்த போலீஸ், ராணுவ காவலையும் மீறி ஜோலி தனி ஆளாக இருந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறார். அதேபோல, எதிரிகளின் கப்பலுக்குள் சென்று அனைவரையும் அலட்டிக் கொள்ளாமல் வீழ்த்துகிறார்.

இறுதி காட்சியில், அமெரிக்க ஜனாதிபதியின் நேரடிஆணையில் மட்டும் இயக்கக்கூடிய அணு ஆயுதத்தை, அரசுக்கு எதிராக சதி செய்யும் அதிகாரி அடிபட்டு, நினைவின்றி கீழே விழுந்திருக்கும் ஜனாதிபதியை வலக்கட்டாயமாக தூக்கி, அவரது முழு கைரேகையை பதிய வைக்கும் நேரத்தில், சால்ட், அவரை துருக்கி, சவுதி அரேபியா போன்ற பல முக்கிய நாடுகள் அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டு பேரழிவு ஏற்படுவதை சால்ட் தடுத்து விடுகிறாள்.

சால்ட் நூறு நிமிடங்களும் விறுவிறுப்பு, ஒன் மேன் ஆர்மி என்பது போல, தனி பெண்ணாக இருந்து ஜோலி செய்யும் சாகசங்களை நிச்சயம் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்.

படத்தின் இயக்குனர் பிலிப் நாய்ஸ், ஸ்டண்ட் இயக்குனர் சைமன் கிரேன் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக சால்ட் இரண்டாம் பகுதியும் வர வாய்ப்பு இருக்கிறது.

- எஸ்.ரஜத்



வாசகர் கருத்து (5)

bossbasheer - thirunelveeli,இந்தியா
25 ஆக, 2010 - 13:28 Report Abuse
 bossbasheer இந்த படத்தை நான் ஒரு முறை பார்த்தேன் . நம்ம ஊரு ஆளு எவனோ ஒருத்தன் ஹாலிவுட் ஆள்களை குழப்பி நம்ம தூள் , தசவதாரம் , படங்களை காப்பி அடித்த படம். வேற எதாவது நல்ல படத்துக்கு போங்க. ”
Rate this:
உமா - Bangalore,இந்தியா
17 ஆக, 2010 - 05:52 Report Abuse
 உமா Great movie!!!!
Rate this:
rajahussain - dubai,இந்தியா
14 ஆக, 2010 - 09:11 Report Abuse
 rajahussain very good movie
Rate this:
விஜயகுமார் - edmonton,கனடா
10 ஆக, 2010 - 05:54 Report Abuse
 விஜயகுமார் ரியல் ஹீரோ
Rate this:
manoj - coimbatore,இந்தியா
05 ஆக, 2010 - 10:39 Report Abuse
 manoj fine.படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சால்ட் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in