செருப்புகள் ஜாக்கிரதை (வெப் சீரிஸ்),Seruppugal jaakirathai
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : சிங்கம் புலி, இரா அகர்வால். விவேக் ராஜகோபால், மோனோகர், தேவிகா தேவு
இயக்குனர் : ராஜேஷ் சூசைராஜ்
இசை : ஹரி
ஓ.டி.டி தளம் : Zee5
வெளியான தேதி : 28 மார்ச் 2025
நேரம் : 2 மணி நேரம் 23 நிமிடம் (6 எபிசோட்)
ரேட்டிங் : 2.5/5

சிங்கம்புலி நடித்துள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' வெப் தொடர் மார்ச் 28 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. செருப்புகள் ஜாக்கிரதை வெப் தொடர் விமர்சனத்தை பார்க்கலாம்.

சுருக்கமான கதை : மாறு வேடத்தில் இருக்கும் ஒரு காவல் அதிகாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் பொருள் பத்திரம் என்று சொல்கிறார் இன்னொரு நபர். அவர் காலில் போட்டிருக்கும் ஷூக்கு பதிலாக செருப்பை மாற்றி அதில் வைரங்களை பதுக்கி வைக்கிறார். திடீரென்று அவருக்கு ஒரு மீட்டிங் அழைப்பு வருகிறது. ஷூவை மாற்றியதால் அந்த வழியாக ஜாக்கிங் வந்த சிங்கம் புலியின் ஷூவை கடன் வாங்கி தான் அணிந்திருக்கும் காலனியை அவரிடம் கொடுத்து இது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அந்த காலணி யார் யாரிடம் மாறி மாறி செல்கிறது என்பதை ஒரு நகைச்சுவை கோணத்தில் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ்.

ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காமெடி வெப் தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடரில் காமெடி கலந்த டிராமா பாணியில் உருவாகியுள்ளது.

சிங்கம்புலியின் இயல்பான நடிப்பாலும், லொள்ளு சபா மனோகரின் எதார்த்தமான காமெடியும் ஒரு பலமாக அமைகிறது. சிங்கம்புலியின் மகனாக நடித்திருக்கும் விவேக் ராஜகோபாலன் நடிப்பும் அற்புதம். நாயகியாக நடித்த இரா அகர்வாலின் கதாபாத்திரம் அழகு. இந்த விஷயமெல்லாம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு விஷயத்தை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே இந்த படத்துக்கு பலவீனம்.

இந்த வெப் தொடரில் பின்னணி இசை சுமாராக இருந்தாலும் ஒரு முழுமையான வெப் தொடரை பார்த்த அனுபவத்தை தருகிறதா என்று பார்த்தல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். திரைக்கதையில் இன்னும் கவனமும், நடிகர்களின் நகைச்சுவையில் இன்னும் கூடுதல் பலம் சேர்த்திருந்தால் ஒரு நல்ல வெப் தொடர் என்றே சொல்லியிருக்கலாம். ஏனோ இந்த விஷயத்தை தவற விட்டு இருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம்.

மொத்தம் 6 எபிசோடாக உருவாகியுள்ள இந்த செருப்புகள் ஜாக்கிரதை, முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, காமெடி சீரிஸாக உருவாகியுள்ளது.

மொத்தத்தில் செருப்புகள் ஜாக்கிரதை வெப் தொடரை பார்க்கும் ஆர்வம் வருமா என்று கேட்டால் நிச்சயம் ஒரு கேள்விக்குறி தான்.

செருப்புகள் ஜாக்கிரதை - கடிக்கிறது

 

பட குழுவினர்

செருப்புகள் ஜாக்கிரதை (வெப் சீரிஸ்)

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓