தினசரி,Dinasari
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சிந்தியா புரொடக்சன் ஹவுஸ்
இயக்கம் - சங்கர்
நடிகர்கள் - ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்டே, மீரா கிருஷ்ணன், வினோதினி, எம் எஸ் பாஸ்கர், பிரேம்ஜி, சாம்ஸ், ராதாரவி, சாந்தினி தமிழரசன்.
இசை - இளையராஜா
வெளியான தேதி - 14.02.2025
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

கதை சுருக்கம்
தமிழாசிரியர் எம் எஸ் பாஸ்கருக்கும் அவரது காதல் மனைவி மீரா கிருஷ்ணனுக்கும் மகனாக இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தனக்கு வரும் மனைவி தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்த ஆசையால் அவருக்குப் பெண் அமையாமல் இருக்க, அமெரிக்காவில் பிறந்து தமிழ்க் கலாசாரம் கற்று குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் சிந்தியா லூர்டேவை, சில பொய்களை ஸ்ரீகாந்திடம் சொல்லி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் அவரது குடும்பத்தார்.

முதலிரவிலேயே அவருக்கும் மனைவிக்கும் ஒத்துக் கொள்ளாமல் போக, ஒவ்வொரு உண்மைகளும் அவருக்குத் தெரிந்து, சண்டை வர, அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் மனைவி பக்கம் நிற்க, அவருக்கு எல்லோர் மேலயும் கோபம் வருகிறது. அதோடு வாழ்க்கையில் பெரிய ஆளாக வரவேண்டுமென ஆசைப்பட்டு பல இடங்களில் கடன் வாங்கி மாட்டிக்கொள்கிறார். போதாக்குறைக்கு அவர் பார்த்து வந்த ஐடி வேலையும் பறிபோய் விடுகிறது. இந்த சூழ்நிலையில் அவரது திருமண வாழ்க்கை என்ன ஆனது, பிரச்னைகளிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி

‛வாழ்க்கையில் அளவுக்கு மேல் ஆசைப்படாதே. பணத்தை விட உறவுகளும், நிம்மதியும் முக்கியம்' என்கிற எவர் கிரீன் விஷயம்தான் படத்தின் மையக்கதை. அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஒற்றை ஆளாக வீட்டில் நடக்கும் காட்சிகளைத் தூக்கிச் சுமக்கிறார். மற்றொருபுறம் அவருக்கு சமமாக நின்று சதியாடுகிறார் அப்பா எம் எஸ் பாஸ்கர். அக்காவாக நடித்து இருக்கும் வினோதினியின் தம்பி பாசம் ரசிக்க வைக்கிறது. நாயகி சிந்தியா லூர்டேவின் நிறமும் பேச்சும் கதாநாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. ராஜேஷ் யாதவ் கேமராவில் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் அதிகம் கவர்கிறார் இளையராஜா.

பிளஸ் & மைனஸ்

மிகச் சிறப்பாகச் செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் வழுக்குகிறது. திரைக்கதை ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இயக்குனர் சங்கர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். படத்தில் வசனம் தவிர தொழில் நுட்பங்கள் எல்லாமே பலவீனமாக இருக்கின்றன.

தினசரி - அரைத்த மாவு

 

தினசரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தினசரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓