பேபி & பேபி,Baby & Baby
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : யுவராஜ் பிலிம்ஸ்
இயக்கம் : பிரதாப்
நடிகர்கள் : ஜெய், பிரக்யா நக்ரா, யோகி பாபு, சத்யராஜ்,சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, ஸ்ரீமன் நிழல்கள் ரவி.
இசை : டி.இமான்
வெளியான தேதி : 14.02.2025
நேரம்: 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதை சுருக்கம்

ஜெய், யோகி பாபு இருவரும் துபாயில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஜெய் - பிரக்யா நக்ரா தம்பதிக்கு ஆண் குழந்தையும், யோகி பாபு-சாய் தன்யாவுக்கு பெண் குழந்தையும் பிறக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெய்யின் தந்தை சத்யராஜும், யோகி பாபுவின் தந்தை இளவரசுவும் குழந்தையையுடன் ஊருக்கு வருமாறு அழைக்கின்றனர். இதனால் துபாயில் இருந்து சொந்த ஊர் செல்ல சென்னை வரும் இரண்டு ஜோடிகளும் அவர்களின் உறவினர் செய்த குளறுபடியால் குழந்தைகள் இடம் மாறி விடுகிறது. குழந்தைகள் மாறிய விவரத்தை அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் எப்படி சரி செய்தனர், அதில் நடந்த குழப்பம் என்ன, குழந்தைகளை மீண்டும் மாற்றிக் கொண்டனரா? என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி

ஹீரோயிசம் இல்லாத கதையில் ஒரு குழந்தைக்கு தந்தையாக சிறப்பான நடிப்பை ஜெய் கொடுத்துள்ளார். மற்றொரு தந்தையாக யோகி பாபு அவருடன் போட்டி போட்டு நடித்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கவுண்டரும் ரசிக்க வைக்கிறது. அவர்களின் மனைவியராக வரும் பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா இருவருமே அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து உள்ளனர். குழந்தைகள் மாறிப் போன போது ஒரு தாயின் ஏக்கத்தை திரையில் காட்டி நடித்துள்ளனர். சத்யராஜ் மற்றும் இளவரசு இருவருமே தங்களின் அனுபவ நடிப்பால் அந்த கேரக்டரை தாங்கிப் பிடிக்கின்றனர். கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஸ்ரீமன் சிங்கம்புலி ஆகியோர் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் சிரிப்புதான் வரவில்லை.

குழந்தை மாறி விடுவதும், அதனைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளையும் சேர்த்து ஒரு கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரதாப். இருப்பினும் குழந்தைகள் மாறுவது, குழந்தைகள் கடத்துவது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே போதும் என்ற அளவுக்கு வந்துவிட்டதால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதோடு பெரிய நட்சத்திர காமெடி பட்டாளத்தையே வைத்துக் கொண்டு ஒரு நல்ல காமெடி படத்தை இயக்குனர் தராதது ஏன் என தெரியவில்லை.

டி இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. சாரதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது.

பிளஸ் - மைனஸ்
படம் முழுவதும் பெரும் நடிகர் கூட்டம் இருப்பது பிளஸ் என்றாலும், குழந்தை மாறிப்போன விஷயம் தெரிந்த உடன் சில மணி நேரத்தில் மீட்கக்கூடிய விஷயத்தை லாஜிக் இல்லாமல் ஜவ்வு போல் திரைக்கதையை இழுத்து இருப்பது மைனஸ் ஆக உள்ளது. அதோடு தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய டெம்பிளாட் கிளைமாக்ஸ் சேசிங் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது.

பேபி & பேபி - குழந்தைத்தனம்

 

பட குழுவினர்

பேபி & பேபி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜெய்

இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஜெய். 1985ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்த ஜெய், சின்ன வயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டவர். விஜய் நடிப்பில் வௌியான பகவதி படத்தின் மூலம் விஜய்யின் தம்பியாக அறிமுகமான ஜெய், அதனைத்தொடர்ந்து சென்னை-28 படம் மூலம் பேசப்படும் நடிகரானார். தொடர்ந்து அவர் நடித்த சுப்ரமணியபுரம் படம் ஜெய்யை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. அதன்பின்னர் கோ, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் படங்கள் ஜெய்யை முன்னணி நடிகராக உயர்த்தியது.

மேலும் விமர்சனம் ↓